தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-432

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதரின் தூதராக முஆத் பின் ஜபல் (ரலி) யமன் நாட்டு ஆளுநராக எங்களிடம் வருகையளித்தார். பஜ்ர் தொழுகையில் அவரது தக்பீரை செவியுற்றேன். அவர் கம்பீரமான குரலைக் கொண்டிருந்தார்.

அவர் மீது நான் அன்பு கொண்டேன். மரணமாகி சிரியாவில் அவரை நான் அடக்கம் செய்யும் வரை அவரை விட்டும் நான் பிரியவே இல்லை. அவருக்கு பிறகு மக்களில் அதிக ஞானமுள்ள ஒருவரை தேடிப் பார்த்து அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)யிடம் வந்து, அவர் மரணம் ஆகும் வரை அவரையே பின்பற்றியிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குரிய நேரத்தை தாண்டி வேறு நேரத்தில் தொழும் அமீர்கள் உங்களை ஆளும் போது நீ எப்படி நடந்து கொள்வாய் என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலை என்னை அடையும் போது நான் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று எனக்கு நீங்கள் உத்தரவு இடுகின்றீர்கள் என்று நான் (திரும்ப) கேட்டேன். அதற்கு அவர்கள் (கடமையான) தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடு! அந்த அமீர்கள் தொழும் போது அவர்களுடனும் நீ சேர்ந்து தொழுது உனது தொழுகையை உபரியாக ஆக்கிக் கொள்க என்று சொன்னார்கள் என அம்ர் பின் மைமூன் அல் அவதி அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

(அபூதாவூத்: 432)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ دُحَيْمٌ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي حَسَّانُ يَعْنِي ابْنَ عَطِيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَابِطٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ الْأَوْدِيِّ، قَالَ

قَدِمَ عَلَيْنَا مُعَاذُ بْنُ جَبَلٍ الْيَمَنَ رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا، قَالَ: فَسَمِعْتُ تَكْبِيرَهُ مَعَ الْفَجْرِ رَجُلٌ أَجَشُّ الصَّوْتِ، قَالَ: فَأُلْقِيَتْ عَلَيْهِ مَحَبَّتِي فَمَا فَارَقْتُهُ حَتَّى دَفَنْتُهُ بِالشَّامِ مَيِّتًا، ثُمَّ نَظَرْتُ إِلَى أَفْقَهِ النَّاسِ بَعْدَهُ فَأَتَيْتُ ابْنَ مَسْعُودٍ فَلَزِمْتُهُ حَتَّى مَاتَ، فَقَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكُمْ إِذَا أَتَتْ عَلَيْكُمْ أُمَرَاءُ يُصَلُّونَ الصَّلَاةَ لِغَيْرِ مِيقَاتِهَا»، قُلْتُ: فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِمِيقَاتِهَا وَاجْعَلْ صَلَاتَكَ مَعَهُمْ سُبْحَةً»


AbuDawood-Tamil-432.
AbuDawood-Shamila-432.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.