தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-433

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எனக்கு பின்னால் உங்களிடம் ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். தொழுகை நேரம் கடந்து விடும் வரை தொழுகைக்குரிய நேரத்தில் அவர்கள் தொழாமல் பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, நீங்கள் தொழுகைக்குரிய நேரத்தில் தொழுது விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவுடன், அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களுடன் சேர்ந்து தொழலாமா? என்று ஒருவர் கேட்டார். ஆம்! நீ விரும்பினால் தொழுது கொள்! என்று சொன்னார்கள் என உப்பாதா பின் சாமித் (ரலி) அறிவிக்கின்றார்.

அவர்களுடன் நான் தொழுகையை அடைந்து கொண்டால் அவர்களுடன் சேர்ந்து தொழலாமா? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அவர்கள் நீ விரும்பினால் தொழுது கொள் என்று பதிலளித்தார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 433)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي الْمُثَنَّى، عَنِ ابْنِ أُخْتِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ الْمَعْنَى، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ أَبِي الْمُثَنَّى الْحِمْصِيِّ، عَنْ أَبِي أُبَيٍّ ابْنِ امْرَأَةِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّهَا سَتَكُونُ عَلَيْكُمْ بَعْدِي أُمَرَاءُ تَشْغَلُهُمْ أَشْيَاءُ عَنِ الصَّلَاةِ لِوَقْتِهَا حَتَّى يَذْهَبَ وَقْتُهَا فَصَلُّوا الصَّلَاةَ لِوَقْتِهَا»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أُصَلِّي مَعَهُمْ؟، قَالَ: «نَعَمْ، إِنْ شِئْتَ» – وَقَالَ سُفْيَانُ: إِنْ أَدْرَكْتُهَا مَعَهُمْ أُصَلِّي مَعَهُمْ؟ – قَالَ: «نَعَمْ، إِنْ شِئْتَ»


AbuDawood-Tamil-433.
AbuDawood-Shamila-433.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.