பாடம் : 154
தொழாமல் தூங்கியவர் மற்றும் தொழுகையை மறந்தவர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்தில் இருந்து திரும்பும் போது இரவுப் பயணம் மேற்கொண்டார்கள். எங்களுக்குத் தூக்கம் வந்ததும் ஓய்வெடுத்தார்கள். பிலாலிடம் இன்றைய இரவில் காவல் காப்பீராக! என்று சொன்னார்கள். பிலால் தன்னுடைய வாகனத்தில் சாய்ந்து கொண்டிருக்கும் போதே அவர்களது கண்களில் தூக்கம் மிகைத்து விட்டது. சூரிய வெளிச்சம் தங்கள் மீது வருகின்றவரை நபி (ஸல்) அவர்களோ, பிலாலோ அவர்கள் தோழர்களில் வேறு யாருமே விழிக்கவில்லை.
அவர்களில் முதன் முதலில் விழித்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்கம் அடைந்து, பிலாலே! என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்! உங்களுடைய உயிரைப் பிடித்து வைத்திருந்தவனே என்னுடைய உயிரையும் பிடித்து விட்டான்” என்று பிலால் சொன்னார். உடனே அவர்களுடைய வாகனங்களில் கொஞ்சம் ஓட்டிச் சென்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்து பிலாலுக்கு உத்தரவு இட்டார்கள்.
பிலால் தொழுகைக்கு இகாமத் சொன்னார். அவர்களுக்கு நபி (ஸல்) சுப்ஹ் தொழுவித்தார்கள். தொழுகை முடிந்ததும், “தொழுகையை மறந்தவர் அந்தத் தொழுகை நினைவுக்கு வந்தவுடன் தொழுது விடுவாராக! ஏனெனில் என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக! என்று அல்லாஹ் சொல்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸில் லித்திக்கரா என்று இடம் பெற்றுள்ளது
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :
இப்னு ஷிஹாம் லித்திக்ரா என்றே ஓதுவார் என யூனூஸ் தெரிவிக்கின்றார். இந்த ஹதீஸில் லித்திக்ரீ என்று இடம் பெற்றுள்ளதாக யூனூஸ் வழியாக அன்பஸா தெரிவிப்பதாக அஹ்மத் கூறுகின்றார்.
இந்த ஹதீஸில் வரும் அல்கரா என்பதற்கு தூக்கம் என்று பொருளாகும் என்று அஹ்மத் கூறுகின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)
(அபூதாவூத்: 435)154- بَابٌ فِي مَنْ نَامَ عَنِ الصَّلَاةِ، أَوْ نَسِيَهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ خَيْبَرَ فَسَارَ لَيْلَةً حَتَّى إِذَا أَدْرَكَنَا الْكَرَى عَرَّسَ، وَقَال لِبِلَالٍ: «اكْلَأْ لَنَا اللَّيْلَ» قَالَ: فَغَلَبَتْ بِلَالًا عَيْنَاهُ، وَهُوَ مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ وَلَا أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى إِذَا ضَرَبَتْهُمُ الشَّمْسُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَهُمُ اسْتِيقَاظًا، فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا بِلَالُ»، فَقَالَ: أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِنَفْسِكَ ِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَاقْتَادُوا رَوَاحِلَهُمْ شَيْئًا ثُمَّ تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِلَالًا فَأَقَامَ لَهُمُ الصَّلَاةَ وَصَلَّى بِهِمُ الصُّبْحَ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ، قَالَ: ” مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ تَعَالَى قَالَ: «أَقِمِ الصَّلَاةَ لِلذِّكْرَى»،
قَالَ يُونُسُ: وَكَانَ ابْنُ شِهَابٍ يَقْرَؤُهَا كَذَلِكَ، قَالَ أَحْمَدُ: قَالَ عَنْبَسَةُ: يَعْنِي عَنْ يُونُسَ فِي هَذَا الْحَدِيثِ «لِذِكْرِي»، قَالَ أَحْمَدُ: الْكَرَى النُّعَاسُ.
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-435.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-370.
சமீப விமர்சனங்கள்