தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-437

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் தனக்குரிய ஒரு பயணத்தில் சென்று கொண்டிருக்கும் போது (ஓய்வெடுப்பதற்காக பாதையை விட்டு) ஓதுங்கினார்கள். நானும் அவர்களுடன் ஓதுங்கினேன். அப்போது (நம் முன் எத்தனை பேர்கள் வருகின்றார்கள் என்று) பார் என்றார்கள். இதோ ஒரு பயணி, இரு பயணிகள், மூன்று பேர்கள் என நாங்கள் ஏழு பேர்கள் இருக்கின்றோம் என்று தெரிவித்தேன். சுப்ஹு தொழுகைக்கு (எழுந்திருப்பதற்கு) ஓர் ஏற்பாடு செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஆனால் உறங்கியவர்களின் செவிப்புலன்கள் செயலிழந்து விட்டன. வெயில் பட்டுதான் அவர்கள் கண் விழித்தார்கள். அவர்கள் எழுந்து சொஞ்ச நேரம் பயணம் செய்தனர். பிறகு இறங்கி உலூ செய்தனர். பிலால் பாங்கு சொன்னதும் அவர்கள் சுப்ஹுடைய சுன்னத் இரண்டு ரக்கஅத்துக்களை தொழுதனர். பிறகு சுப்ஹ் தொழுது விட்டு பயணம் மேற்கொண்டார்கள்.

அப்போது ஒருவர் இன்னொருவருடன் நாம் (தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாது) வரம்பு மீறிவிட்டோம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உறக்கத்தில் வரம்பு மீறுவது கிடையாது. வரம்பு மீறுதல் என்பது விழித்துக் கொண்டிருக்கும் போது தான். எனவே, உங்களில் ஒரு தொழுகையை மறந்து விட்டால் அது நினைவுக்கு வந்த மாத்திரத்தில் தொழுது விடுவாராக! மறுநாள் அதற்குரிய நேரத்தில் தொழுது விடுவாராக! மறுநாள் அதற்குரிய நேரத்தில் தொழுது விடுவாராக! என்று சொன்னார்கள் என அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸில் இதைவிட நிறைவாக முஸ்லிமிலும், இதன் ஒரு பகுதி நஸயீ, இப்னு மாஜாவிலும் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 437)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ الْأَنْصَارِيِّ، حَدَّثَنَا أَبُو قَتَادَةَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ لَهُ فَمَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِلْتُ مَعَهُ، قَالَ: «انْظُرْ»، فَقُلْتُ: هَذَا رَاكِبٌ، هَذَانِ رَاكِبَانِ، هَؤُلَاءِ ثَلَاثَةٌ، حَتَّى صِرْنَا سَبْعَةً، فَقَالَ: «احْفَظُوا عَلَيْنَا صَلَاتَنَا» – يَعْنِي صَلَاةَ الْفَجْرِ – فَضُرِبَ عَلَى آذَانِهِمْ فَمَا أَيْقَظَهُمْ إِلَّا حَرُّ الشَّمْسِ فَقَامُوا فَسَارُوا هُنَيَّةً ثُمَّ نَزَلُوا فَتَوَضَّئُوا وَأَذَّنَ بِلَالٌ فَصَلَّوْا رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ صَلَّوُا الْفَجْرَ وَرَكِبُوا، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: قَدْ فَرَّطْنَا فِي صَلَاتِنَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ لَا تَفْرِيطَ فِي النَّوْمِ، إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا سَهَا  أَحَدُكُمْ عَنْ صَلَاةٍ فَلْيُصَلِّهَا حِينَ يَذْكُرُهَا وَمِنَ الْغَدِ لِلْوَقْتِ»


AbuDawood-Tamil-437.
AbuDawood-Shamila-437.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.