தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-44

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அங்கே தூய்மையை விரும்பக் கூடிய மக்கள் உள்ளனர் (9:108) என்ற இந்த ‎இறைவசனம் குபா (என்ற பள்ளி) வாசிகள் தொடர்பாக இறங்கியது என்று நபி(ஸல்) ‎அவர்கள் கூறினார்கள். (மலஜலம் கழித்தால்) அவர்கள் தண்ணீரைக் கொண்டு சுத்தம் ‎செய்பவர்களாக இருந்தனர். ஆதலால் இந்த வசனம் அவர்கள் தொடர்பாக இறங்கியது.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎

‎(குறிப்பு: இதை இமாம் திர்மிதீ, இப்னுமாஜா ஆகியோர் தமது நூல்களில் பதிவு ‎செய்துள்ளனர். இமாம் திர்மிதீ இந்த ஹதீஸை கரீப் என்ற வகையில் ‎சேர்க்கின்றார்கள். இதன் மூன்றாவது அறிவிப்பாளரான இப்ராஹீம் பின் அபீமைமூனா ‎என்பவர் யார் என அறியப்படாதவர். இப்னுமாஜாவின் அறிவிப்பாளர் தொடரில் ‎மேற்கண்டவர் இடம் பெறாவிடினும் அதில் இடம் பெறும் மூன்றாவது ‎அறிவிப்பாளராக உத்பா பின் அபீ ஹகீம் என்பவர் பலவீனமானவர். மேலும் ‎இப்னுமாஜாவின் அறிவிப்பாளர் தொடரில் அபூதல்ஹா (ரலி) இவ்வாறு அறிவிப்பதாகக் ‎கூறும் தல்ஹாபின் நாபிவு என்பார் அபூஅய்யூபு (ரலி)யின் காலத்தவர் அல்ல) எனவே ‎இது ஏற்கத்தக்கதல்ல.‎

(அபூதாவூத்: 44)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ يُونُسَ بْنِ الْحَارِثِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِي أَهْلِ قُبَاءٍ: {فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا} [التوبة: 108] “، قَالَ: «كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ، فَنَزَلَتْ فِيهِمْ هَذِهِ الْآيَةُ»


AbuDawood-Tamil-44.
AbuDawood-Shamila-44.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.