அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணங்களில் ஒரு பயணத்தின் போது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் சூரியன் உதிக்கும் வரை தூங்கிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் கண் விழித்ததும் இந்த இடத்தை விட்டும் நகர்ந்து விடுங்கள் என்று சொன்னார்கள். பிறகு பிலாலுக்கு அவர்கள் உத்தரவிட்டதும் அவர் அதான் சொன்னார். பிறகு நபித் தோழர்கள் உலூச் செய்து பஜ்ருடைய சுன்னத்தை தொழுதார்கள். பிறகு பிலாலுக்கு உத்தரவிட்டதும் தொழுகைக்கு அவர் இகாமத் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை தொழுவித்தனர் என அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அறிவித்தார்.
(அபூதாவூத்: 444)حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ وَهَذَا لَفْظُ عَبَّاسٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ حَدَّثَهُمْ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ يَعْنِي الْقِتْبَانِيَّ، أَنَّ كُلَيْبَ بْنَ صُبْحٍ، حَدَّثَهُمْ أَنَّ الزِّبْرِقَانَ حَدَّثَهُ، عَنْ عَمِّهِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، قَالَ
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فَنَامَ، عَنِ الصُّبْحِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَنَحَّوْا عَنْ هَذَا الْمَكَانِ»، قَالَ: «ثُمَّ أَمَر بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ تَوَضَّئُوا وَصَلَّوْا رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ فَصَلَّى بِهِمْ صَلَاةَ الصُّبْحِ»
AbuDawood-Tamil-444.
AbuDawood-Shamila-444.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்