தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4482

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஒருவர் தொடர்ந்து மது அருந்தினால் (என்ன தண்டனை?)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மது குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)

(அபூதாவூத்: 4482)

بَابٌ إِذَا تَتَابَعَ فِي شُرْبِ الْخَمْرِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ ذَكْوَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا شَرِبُوا الْخَمْرَ فَاجْلِدُوهُمْ، ثُمَّ إِنْ شَرِبُوا فَاجْلِدُوهُمْ، ثُمَّ إِنْ شَرِبُوا فَاجْلِدُوهُمْ، ثُمَّ إِنْ شَرِبُوا فَاقْتُلُوهُمْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3886.
Abu-Dawood-Shamila-4482.
Abu-Dawood-Alamiah-3886.
Abu-Dawood-JawamiulKalim-3888.




வேறு சில செய்திகளின் மூலம் கொலை செய்தல் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்று சிலர் கூறியுள்ளனர்.

அந்த செய்திகள் சரியானவை அல்ல என்றும், கொலை செய்தல் கட்டாய சட்டமல்ல; ஆட்சியாளரின் விருப்பத்தை பொருத்துள்ளது என்று வேறுசில ஹதீஸ்ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-6780 ,

2 comments on Abu-Dawood-4482

    1. அஸ்ஸலாமு அலைக்கும். இந்தச் சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு மாற்றப்பட்டுவிட்டது என்று வேறு செய்திகளில் வந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் ஆய்வு செய்து பதிவுசெய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.