தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-45

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 24

சுத்தம் செய்த பின் கையை தரையில் தேய்த்துக் கழுவுதல்.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் சென்றால் நான் அவர்களுக்கு சிறு பாத்திரத்தில் ‎அல்லது தோல்பையில் தண்ணீர் கொண்டு செல்வேன். அவர்கள் துப்புரவு செய்து ‎கொள்வார்கள். இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பின்னர் அவர்கள் ‎தங்கள் கையை தரையில் தேய்ப்பார்கள். பிறகு அவர்களுக்கு (தண்ணீருள்ள) ‎வேறொரு பாத்திரத்தைக் கொண்டு வருவேன். அவர்கள் உலூச் செய்வார்கள் என்று ‎வகீஃ அவர்களுடைய அறிவிப்பில் காணப்படுகிறது.‎

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)‎

இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :- (வகிஃ அவர்களின் ஹதீஸை ‎விட) அஸ்வத் பின் ஆமிர் அவர்களுடைய ஹதீஸில் கூடுதல் விவரங்கள் ‎இருக்கின்றன.‎

‎(குறிப்பு: நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது. ‎இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஷரீக் என்பவர் நினைவாற்றல் ‎குறைந்தவர் என்பதால் இது பலவீனமான ஹதீஸாகும்.)‎

(அபூதாவூத்: 45)

24- بَابُ الرَّجُلِ يَدْلُكُ يَدَهُ بِالْأَرْضِ إِذَا اسْتَنْجَى

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا شَرِيكٌ – وَهَذَا لَفْظُهُ – ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ يَعْنِي الْمُخَرَّمِيَّ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شَرِيكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى الْخَلَاءَ، أَتَيْتُهُ بِمَاءٍ فِي تَوْرٍ أَوْ رَكْوَةٍ فَاسْتَنْجَى»، قَالَ أَبُو دَاوُدَ: فِي حَدِيثِ وَكِيعٍ: «ثُمَّ مَسَحَ يَدَهُ عَلَى الْأَرْضِ، ثُمَّ أَتَيْتُهُ بِإِنَاءٍ آخَرَ فَتَوَضَّأَ»

قَالَ أَبُو دَاوُدَ: وَحَدِيثُ الْأَسْوَدِ بْنِ عَامِرٍ أَتَمُّ


AbuDawood-Tamil-45.
AbuDawood-Shamila-45.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.