அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளி வாசல் செங்கற்களாலும் பேரீத்தம் கீற்றுகளாலும் கட்டப் பட்டிருந்தது என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார். பள்ளி வாசல்களின் தூண்கள் பேரீத்தம் மரக் கட்டைகளால் ஆனவை. இதில் அபூபக்ர் எதையும் அதிகப்படுத்தவில்லை. அதில் உமர் (ரலி) மாற்றம் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இருந்த அதே அமைப்பிலேயே அதைக் கட்டி அந்த தூண்களை அப்படியே மீண்டும் வைத்து விட்டார்கள். உஸ்மான் (ரலி) அதை மாற்றியமைக்கும் போது அதில் அதிகப்படியான வேலைப்பாடுகளை மேற்கொண்டார்கள். வண்ணக் கற்கள், சுண்ணாம்பு ஆகியவற்றை கொண்டு அதன் சுவர்களை அமைத்தார்கள். அதன் தூண்களை வண்ணக் கற்களைக் கொண்டும், அதன் முகட்டை தேக்கினாலும் அமைத்தார்கள் என முஜாஹித் தெரிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :
அல் இஸ்ஸா என்று ஹதீஸில் வரும் இந்த வார்த்தைக்கு அல் ஜுஸ்ஸீ என்று பொருளாகும்.
(அபூதாவூத்: 451)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، وَمُجَاهِدُ بْنُ مُوسَى، وَهُوَ أَتَمُّ، قَالَا: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَخْبَرَهُ
أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَبْنِيًّا بِاللَّبِنِ وَالْجَرِيدِ – قَالَ مُجَاهِدٌ: وَعُمُدُهُ مِنْ خَشَبِ النَّخْلِ – فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بِنَائِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّبِنِ وَالْجَرِيدِ وَأَعَادَ عُمُدَهُ – قَالَ مُجَاهِدٌ: عُمُدَهُ خَشَبًا – وَغَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقْفَهُ بِالسَّاجِ – قَالَ مُجَاهِدٌ: وَسَقَّفَهُ السَّاجَ –
قَالَ أَبُو دَاوُدَ: الْقَصَّةُ: الْجِصُّ
AbuDawood-Tamil-451.
AbuDawood-Shamila-451.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்