தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-452

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் சுவர்கள் பேரீத்த மரக்கட்டைகளால் ஆனவை. அதன் முகடு பேரீத்த மர கீற்றுகளால் வேயப்பட்டிருந்தது. பிறகு அவை அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் இற்றுப் போய்விட்டன. அதை அபூபக்கர் (ரலி) பேரீத்தமரக் கட்டைகள், பேரீத்த மரக் கீற்றுகள் ஆகியவற்றை கொண்டு கட்டினார். மீண்டும் உஸ்மான் (ரலி) ஆட்சிக் காலத்தில் அவை இற்றுப் போனதும் அவற்றிற்கு பதிலாக செங்கற்களால் கட்டினார்கள். அவை இன்று வரை அப்படியே உள்ளது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 452)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَطِيَّةَ، عَنِ ابْنِ عُمَرَ

«أَنَّ مَسْجِدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ سَوَارِيهِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جُذُوعِ النَّخْلِ أَعْلَاهُ مُظَلَّلٌ بِجَرِيدِ النَّخْلِ، ثُمَّ إِنَّهَا نَخِرَتْ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ فَبَنَاهَا بِجُذُوعِ النَّخْلِ وَبِجَرِيدِ النَّخْلِ، ثُمَّ إِنَّهَا نَخِرَتْ فِي خِلَافَةِ عُثْمَانَ فَبَنَاهَا بِالْآجُرِّ فَلَمْ تَزَلْ ثَابِتَةً حَتَّى الْآنَ»


AbuDawood-Tamil-.452
AbuDawood-Shamila-452.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.