அனஸ் (ரலி) அறிவிப்பதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பனூ அம்ர் பின் அவ்ப் என்றழைக்கப்படும் கூட்டத்தார்கள் வாழும் மதீனாவின் மேட்டுப் பகுதியில் இறங்கி அவர்களிடம் பதினான்கு இரவுகள் தங்கினார்கள். பிறகு நஜ்ஜார் கிளையினரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். நஜ்ஜார் கிளையினர் தோள்களில் வாள்களை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி)யும் வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை இப்போது நான் பார்ப்பது போல் இருக்கின்றது என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.
நஜ்ஜார் கிளைத் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களை சூழ்ந்து விட்டதும் தனது வாகனத்தை விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தொழுகை நேரம் ஆனதும் அந்த இடத்திலேயே தொழுபவர்களாகவும், ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாகவும் இருந்தனர். அப்போது தான் அவர்கள் பள்ளி கட்டுமாறு உத்தரவிட்டு உடனே (நஜ்ஜார் கிளையாரை நோக்கி) நஜ்ஜார் கிளையாரே! உங்களுடைய இந்த தோட்டத்தை எனக்கு விலைக்கு தாருங்கள் என்று நபி (ஸல்) கேட்டனர். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதனுடைய விலையை (கூலியை) அல்லாஹ்விடத்திலேயே தவிர வேறு யாரிடத்திலும் பெறமாட்டோம் என்று பதில் சொன்னார்கள். நான் பின்னால் சொல்லும் செய்தியும் பள்ளி கட்டுவது தொடர்பானதுதான் என்று கூறி அனஸ் (ரலி) மேலும் அறிவிப்பதாவது :
அந்த இடத்தில் இணை வைப்பவர்களுடைய கப்ருகள் இருந்தன. பாழடைந்த பொருட்கள் அதில் கிடந்தன. அதில் பேரீத்த மரங்களும் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை படி இணைவைப்பவர்களின் அடக்கத் தலங்கள் தோண்டப்பட்டன. பாழடைந்த பொருட்கள் சரிசமமாக்கப் பட்டன. பேரீத்த மரங்கள் வெட்டப் பட்டன. பள்ளியின் கிப்லா திசையில் பேரீத்த மரக்கட்டைகளை நட்டினார்கள். அதன் வாசலின் இருநிலைகளையும் செங்கற்களால் அமைத்தனர். நபித் தோழர்கள் பாடிக்கொண்டே பாறைகளை நகற்றிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து யா அல்லாஹ் மறுமை நன்மையை தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது. அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி புரிவாயாக! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா அகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 453)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ
قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَنَزَلَ فِي عُلُوِّ الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ: لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِينَ سُيُوفَهُمْ، فَقَالَ أَنَسٌ: فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَأَبُو بَكْرٍ رِدْفُهُ، وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، وَإِنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ، ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا» فَقَالُوا: وَاللَّهِ، لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ أَنَسٌ: وَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ، كَانَتْ فِيهِ قُبُورُ الْمُشْرِكِينَ، وَكَانَتْ فِيهِ خِرَبٌ، وَكَانَ فِيهِ نَخْلٌ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ، فَنُبِشَتْ وَبِالْخِرَبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ، وَجَعَلُوا عِضَادَتَيْهِ حِجَارَةً، وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ، وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ فَانْصُرِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ»
AbuDawood-Tamil-453.
AbuDawood-Shamila-453.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்