தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-454

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பள்ளியின் இந்த இடம் (முன்பு) நஜ்ஜார் கிளையாருக்குரிய தோட்டமாக இருந்தது. அதில் பயிர் செய்யும் பகுதியும் பேரீத்த மரங்களும் இணை வைப்பவர்களுக்குரிய அடக்கத்தலங்களும் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் (நஜ்ஜார் கிளையாரிடம்) இதை எனக்கு விலைக்கு தாருங்கள் என்று கேட்டபோது, இதற்குண்டான கிரயத்தை பெற மாட்டோம் என்று அவர்கள் சொல்லி விட்டனர். எனவே பேரீத்த மரங்கள் வெட்டப்பட்டன. பயிர் செய்யுமிடம் சமப்படுத்தப் பட்டது. இணைவைப்பவர்கள் அடக்கவிடங்கள் தோண்ட பட்டன என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர் (மேலுள்ள ஹதீஸை போன்று) அறிவிக்கின்றார். 

அன்சாரிகளுக்கு உதவி செய் என்பதற்கு பதிலாக அன்சாரிகளை மன்னித்து விடு! என்று அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

இது போன்ற ஹதீஸை அப்துல் வாரிஸ் அறிவிக்கின்றார் என மூஸா தெரிவிக்கின்றார். ஆனால் அப்துல் வாரிஸ் (பயிர்கள் என்பதற்கு பதிலாக) பாழடைந்த பொருட்கள் என்று அறிவிக்கின்றார். இந்த வார்த்தை கொண்டுள்ள ஹதீஸைத்தான், தான் ஹம்மாதுக்கு அறிவித்ததாக அப்துல் வாரிஸ் தெரிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 454)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ

كَانَ مَوْضِعُ الْمَسْجِدِ حَائِطًا لِبَنِي النَّجَّارِ فِيهِ حَرْثٌ وَنَخْلٌ، وَقُبُورُ الْمُشْرِكِينَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «ثَامِنُونِي بِهِ» فَقَالُوا: لَا نَبْغِي بِهِ ثَمَنًا، فَقَطَعَ النَّخْلَ وَسَوَّى الْحَرْثَ وَنَبَشَ قُبُورَ الْمُشْرِكِينَ، وَسَاقَ الْحَدِيثَ، وَقَالَ: «فَاغْفِرْ» مَكَانَ «فَانْصُرْ»، قَالَ مُوسَى: وَحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، بِنَحْوِهِ، وَكَانَ عَبْدُ الْوَارِثِ، يَقُولُ: خِرَبٌ، وَزَعَمَ عَبْدُ الْوَارِثِ، أَنَّهُ أَفَادَ حَمَّادًا هَذَا الْحَدِيثَ


AbuDawood-Tamil-454.
AbuDawood-Shamila-454.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.