தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-461

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 159

பள்ளியை துப்புரவு செய்தல்.

பள்ளியிலிருந்து ஒருவர் அகற்றி விடுகின்ற சிறிய தூசிக்கு வழங்கப்படும் கூலி உட்பட எனது சமுதாயத்தவருக்கு வழங்கப்படும் கூலிகள் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டன. எனது சமுதாயத்தவரின் பாவங்களும் என்னிடத்தில் எடுத்துக் காட்டப்பட்டன. ஒருவர் குர்ஆனின் ஒரு அத்தியாயத்தை அல்லது ஒரு வசனத்தை மனனம் செய்த பிறகு அதை அவர் மறந்து விடுகின்ற பாவத்தை விட வேறு ஒரு பெரிய பாவத்தை நான் காணவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயிலும் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 461)

159- بَابٌ فِي كَنْسِ الْمَسْجِدِ

حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْخَزَّازُ، أَخْبَرَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ، وَعُرِضَتْ عَلَيَّ ذُنُوبُ أُمَّتِي، فَلَمْ أَرَ ذَنْبًا أَعْظَمَ مِنْ سُورَةٍ مِنَ الْقُرْآنِ أَوْ آيَةٍ أُوتِيَهَا رَجُلٌ ثُمَّ نَسِيَهَا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-461.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.