தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-479

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, பள்ளியின் கிப்லா திசையில் சளியை பார்த்து மக்கள் மீது கோபம் கொண்டார்கள். பிறகு அதை தேய்த்து விட்டார்கள். மேலும் நிச்சயமாக உயர்ந்த அல்லாஹ் உங்களுடைய ஒருவரின் முகத்திற்கு முன்னால் இருக்கின்றான். எனவே அவர் தொழும் போது, தனக்கு முன்னால் துப்ப வேண்டாம் என்று சொன்னார்கள் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பாளர் தொடர் : 

இப்னு உமர் ——–> நாபிஉ ———> அய்யூப்

ஹம்மாத் ——-> சுலைமான் பின் தாவூத் ———> அபூதாவூத்

குங்குமத்தைக் கொண்டு வரச் செய்து அதை துடைத்தார்கள் என்று அய்யூப் அறிவித்ததாக நான் கருதுகிறேன் என்று ஹம்மாத் இந்த ஹதீஸின் இடையில் தெரிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

நாபிஉ வழியாக அய்யூப் மூலம் இஸ்மாயில், அப்துல் வாரிஸ் ஆகியோரும், நாபிஉ வழியாக மாலிக் உபைத்துல்லா, மூஸா பின் உக்பா ஆகியோரும் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஹம்மாதை போன்றே அறிவிக்கின்றார்கள். இவர்கள் யாரும் குங்குமத்தைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அய்யூப்பிடமிருந்து மஃமர் அறிவிக்கையில் குங்குமத்தை குறிப்பிட்டுள்ளார். நாபிஉ இடமிருந்து உபைத்துல்லாஹ் வழியாக யஹ்யா பின் சலீம் நறுமண திரவியம் என்று அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 479)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ

بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمًا إِذْ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَتَغَيَّظَ عَلَى النَّاسِ، ثُمَّ حَكَّهَا، قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: فَدَعَا بِزَعْفَرَانٍ فَلَطَّخَهُ بِهِ، وَقَالَ: «إِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِ أَحَدِكُمْ إِذَا صَلَّى، فَلَا يَبْزُقْ بَيْنَ يَدَيْهِ»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ إِسْمَاعِيلُ، وَعَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، وَمَالِكٍ، وَعُبَيْدِ اللَّهِ، وَمُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، نَحْوَ حَمَّادٍ، إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرُوا الزَّعْفَرَانَ، وَرَوَاهُ مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، وَأَثْبَتَ الزَّعْفَرَانَ فِيهِ، وَذَكَرَ يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ الْخَلُوقَ


AbuDawood-Tamil-479.
AbuDawood-Shamila-479.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.