தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-480

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் பேரீத்தமரக் குச்சிகளை விரும்புபவர்களாக இருந்தனர். அக்குச்சிகளில் ஏதாவது ஒன்று அவர்களது கையில் இருந்து கொண்டேயிருக்கும். அந்நிலையில் பள்ளியில் நுழைந்ததும் பள்ளியின் கிப்லா திசையில் காரலை கண்டு அந்தக் குச்சியால் தேய்த்து விட்டார்கள். பிறகு கோபமாக மக்களை முன்னோக்கி உங்களில் ஒருவர் தனது முகத்தில் துப்பவிரும்புவாரா? நிச்சயமாக உங்களில் ஒருவர் கிப்லாவை முன்னோக்கும் போது அவர் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த தன்னுடைய இறைவனைத் தான் முன்னோக்குகின்றார். மலக்கு அவரது வலது பக்கத்தில் இருக்கின்றார். அவர் தனது வலது பக்கத்திலும் தன்னுடைய கிப்லா திசையிலும் அவர் துப்ப வேண்டாம். அவர் தனது இடது பக்கத்தில் அல்லது தன்னுடைய இடது காலுக்கு கீழே துப்புவாராக! அவர் அவசரமாக துப்பியாக வேண்டுமெனில், இவ்வாறு துப்பிவிடுவாராக! என்று சொன்னார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இவ்வாறு துப்பிவிடுவாராக! என்பதற்கு ஒருவர் தனது ஆடையில் துப்பி அதன் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் தேய்த்து விடுவதாகும் என இப்னு அஜ்லான் விளக்கமளிக்கின்றார்.

(அபூதாவூத்: 480)

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ الْعَرَاجِينَ وَلَا يَزَالُ فِي يَدِهِ مِنْهَا، فَدَخَلَ الْمَسْجِدَ فَرَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ مُغْضَبًا، فَقَالَ: «أَيَسُرُّ أَحَدَكُمْ أَنْ يُبْصَقَ فِي وَجْهِهِ؟ إِنَّ أَحَدَكُمْ إِذَا اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَإِنَّمَا يَسْتَقْبِلُ رَبَّهُ عَزَّ وَجَلَّ، وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ، فَلَا يَتْفُلْ عَنْ يَمِينِهِ، وَلَا فِي قِبْلَتِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ، فَإِنْ عَجِلَ بِهِ أَمْرٌ فَلْيَقُلْ هَكَذَا» وَوَصَفَ لَنَا ابْنُ عَجْلَانَ ذَلِكَ أَنْ يَتْفُلَ فِي ثَوْبِهِ، ثُمَّ يَرُدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ


AbuDawood-Tamil-480.
AbuDawood-Shamila-480.
AbuDawood-JawamiulKalim-.




-41097-இப்னு அஜ்லான்

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.