ஒருவர் மக்களுக்கு தொழுவித்தார். அவர் அப்போது கிப்லா திசையில் துப்பினார். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுகையை முடித்ததும் இனி இவர் உங்களுக்கு தொழுவிக்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு பிறகு அவர் தொழுவிக்க விரும்பிய போது, அவரை மக்கள் தொழுவிக்க வேண்டாம் என தடுத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதையும் அவரிடம் தெரிவித்தனர். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது ஆம் (நான் அவ்வாறு சொன்னேன்) என்று அவர்கள் சொன்னார்கள் என அபூஸஹ்லா அஸ்ஸாயிப் பின் கல்லாத் (ரலி) அறிவிக்கின்றார்.
ஆம் என்ற இடத்தில் நீ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வேதனைப் படுத்திவிட்டாய் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நினைக்கின்றேன் என்று இதன் அறிவிப்பாளர் தெரிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 481)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ الْجُذَامِيِّ، عَنْ صَالِحِ بْنِ خَيْوَانَ، عَنْ أَبِي سَهْلَةَ السَّائِبِ بْنِ خَلَّادٍ – قَالَ أَحْمَدُ: مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّ رَجُلًا أَمَّ قَوْمًا، فَبَصَقَ فِي الْقِبْلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ: «لَا يُصَلِّي لَكُمْ»، فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ»، وَحَسِبْتُ أَنَّهُ قَالَ: «إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ»
AbuDawood-Tamil-481.
AbuDawood-Shamila-481.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்