ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) பள்ளியிலிருக்கும் போது அவரிடம் நாங்கள் வந்தோம். அப்போது அவர் அறிவித்ததாவது, எங்களுடைய இந்த பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகையுற்றார்கள். அப்போது அவர்களுடைய கையில் இப்னுதாப் என்ற ரகத்தைச் சார்ந்த பேரீத்த மரக் குச்சி இருந்தது. பள்ளியில் அவர்கள் நோட்டமிட்டபோது கிப்லா திசையில் காரலை கண்டார்கள். அந்தக் குச்சியைக் கொண்டு அதை தேய்த்து விட்டார்கள். பிறகு, உங்களில் யார் தன்னை விட்டும் அல்லாஹ் தனது முகத்தை திருப்பிக் கொள்ள விரும்புவார்? என்று கேட்டார்கள். பிறகு, உங்களில் ஒருவர் தொழ நிற்கும் போது அல்லாஹ் அவருக்கு முன்னால் இருக்கின்றான். எனவே அவர் தனது முகத்திற்கு, முன்னால் தனது வலது பக்கமாகவும் துப்ப வேண்டாம். அவர் தனது இடது பக்கமாக இடது காலுக்கு கீழ் துப்புவாராக! அவருக்கு சளி வேகமாக வந்து விட்டால் தனது ஆடையை இவ்வாறு செய்து கொள்வாராக! என்று கூறி ஆடையை தனது வாயில் வைத்து பிறகு தேய்த்துக் காட்டினார்கள். பிறகு (அபீர் என்ற) வாசனை பொருளை என்னிடம் தாருங்கள் என்று கேட்டார்கள். ஒரு கிளையைச் சார்ந்த இளைஞர் தனது வீட்டிற்கு விரைந்து சென்று தனது கையில் வாசனைப் பொருளைக் கொண்டு வந்தார். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்து பேரீத்த மரக் குச்சியின் முனையில் வைத்து பிறகு காரல் படிந்த கரை மீது தடவி விட்டார்கள்.
(இவ்வாறு அறிவித்த) ஜாபிர் (ரலி) உங்களுடைய பள்ளிகளில் வாசனைப் பொருளை உபயோகிப்பதற்கு இது தான் காரணம் என்று சொன்னார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் விரிவாக பதிவாகியுள்ளது.)
(அபூதாவூத்: 485)حَدَّثَنَا يَحْيَى بْنُ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيَّانِ، بِهَذَا الْحَدِيثِ – وَهَذَا لَفْظُ يَحْيَى بْنِ الْفَضْلِ السِّجِسْتَانِيِّ -، قَالُوا: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ،
أَتَيْنَا جَابِرًا يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ، وَهُوَ فِي مَسْجِدِهِ، فَقَالَ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِنَا هَذَا، وَفِي يَدِهِ عُرْجُونُ ابْنِ طَابٍ فَنَظَرَ فَرَأَى فِي قِبْلَةِ الْمَسْجِدِ نُخَامَةً فَأَقْبَلَ عَلَيْهَا، فَحَتَّهَا بِالْعُرْجُونِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللَّهُ عَنْهُ بِوَجْهِهِ» ثُمَّ قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ، فَلَا يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلْيَبْزُقْ عَنْ يَسَارِهِ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى، فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَقُلْ بِثَوْبِهِ هَكَذَا» وَوَضَعَهُ عَلَى فِيهِ ثُمَّ دَلَكَهُ، ثُمَّ قَالَ: «أَرُونِي عَبِيرًا» فَقَامَ فَتًى مِنَ الْحَيِّ يَشْتَدُّ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِخَلُوقٍ فِي رَاحَتِهِ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَهُ عَلَى رَأْسِ الْعُرْجُونِ ثُمَّ لَطَخَ بِهِ عَلَى أَثَرِ النُّخَامَةِ، قَالَ جَابِرٌ: فَمِنْ هُنَاكَ جَعَلْتُمُ الْخَلُوقَ فِي مَسَاجِدِكُمْ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-485.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்