தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-486

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 166

இணை வைப்பவர் பள்ளிக்குள் பிரவேசிப்பது.

ஒருவர் ஒட்டகையில் (பள்ளிக்கருகே) வந்து அதை பள்ளியில் படுக்க வைத்து, கட்டி போட்டார். பிறகு, உங்களில் முஹம்மது யார்? என்று வினவினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு மத்தியில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருந்தார்கள். இதோ சாய்ந்து கொண்டிருக்கும் இந்த வெண்மையானவர் தான் என்று நாங்கள் பதில் சொன்னோம். அதற்கு அம்மனிதர் அப்துல் முத்தலிபின் பேரனே! என்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், முஹம்மதே! உங்களிடம் (விளக்கம்) கேட்கின்றேன் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸை தொடர்ந்து இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 486)

166- بَابُ مَا جَاءَ فِي الْمُشْرِكِ يَدْخُلُ الْمَسْجِدَ

حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ

دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ قَالَ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَقُلْنَا لَهُ: هَذَا الْأَبْيَضُ الْمُتَّكِئُ، فَقَالَ لَهُ الرَّجُلُ: يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَبْتُكَ» فَقَالَ لَهُ الرَّجُلُ: يَا مُحَمَّدُ إِنِّي سَائِلُكَ وَسَاقَ الْحَدِيثَ


AbuDawood-Tamil-486.
AbuDawood-Shamila-486.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.