தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-499

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 171

அதான் எப்படி செய்வது ?

தொழுகைக்கு மக்களை கொட்டடித்து ஒன்று கூட்ட கொட்டு ஒன்று தயாரிக்கும் படி அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்ட போது, நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் என்னிடம் (கனவில்) ஒருவர் தோன்றினார். அவர் தனது கையில் கொட்டை சுமந்து கொண்டிருந்தார். அப்துல்லாஹ்வே! இந்த கொட்டை (என்னிடம்) விற்கின்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், இதை வாங்கி என்ன செய்ய போகின்றாய் ! என்று கேட்டார். நான் அவரிடம் இதன் மூலம் (மக்களை) தொழுகைக்கு அழைக்கப் போகின்றேன் என்று சொன்னேன். அதற்கு அவர் இதை விட சிறந்ததை காட்டித் தரவா? என்றார். நான் ஆம் என்று சொன்னேன். உடனே அவர், அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு (நிச்சயமாக அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன்.) அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்ன முஹம்மதுர் – ரசூலுல்லாஹு (நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று சாட்சி சொல்கிறேன்) அஷ்ஹது அன்ன முஹம்மதுர் – ரசூலுல்லாஹு – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றிக்கு விரைந்து வாருங்கள்) – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் என்று சொல்வாயாக! என்று சொன்னார்.

பிறகு கொஞ்ச தூரம் தள்ளி சென்று, நீ தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது, அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் – கத்காமதிஸ்ஸலா (தொழுகை துவங்கிவிட்டது) அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் என்று சொல்வீராக! என்று சொன்னார். காலையில் எழுந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நான் கனவில் கண்டதை தெரிவித்தேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் நாடினால் நிச்சயமாக இது உண்மையான கனவேயாகும். பிலாலுடன் எழுந்து நின்று, நீ கண்டதை அப்படியே பிலாலிடம் சொல்லி விடு! அவர் அதன்படி அதான் எழுப்புவார். நிச்சயமாக அவர் உன்னை விட உரத்த குரலுள்ளவர் என்று சொன்னார்கள். நான் பிலாலுடன் எழுந்து நின்று நான் அதை சொல்லிக் கொடுத்தேன். அவர் அதன்படி அதான் சொன்னார். உமர் பின் கத்தாப் தனது வீட்டிலிருந்து செவியுற்றதும் தனது ஆடையை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். (நபி (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தை கொண்டு உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக! அவர் கண்டது போன்று நானும் கனவில் கண்டேன் என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் என்று சொன்னார்கள் என அபூஅப்துல்லாஹ் பின் ஜைத் (ரலி) அறிவிக்கின்றார்.

இவ்வாறு (அதானில் அல்லாஹு அக்பர் என்ற வாசகம் நான்கு தடவையும், இகாமத்தில் இரண்டு தடவையும் கொண்டதாக) அப்துல்லாஹ் பின் ஜைத் (ரலி) யிடமிருந்து சயீத் பின் அல்முஸய்யிப் வழியாக ஜுஹ்ரியின் அறிவிப்பு இடம் பெறுகின்றது.

ஜுஹ்ரியிடமிருந்து இப்னு இஸ்ஹாக் அறிவிக்கும் மேற்கண்ட அறிவிப்பில் அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அகபர் என (நான்கு தடவைகள்) இடம் பெறுகின்றது.

ஜுஹ்ரியிடமிருந்து மஃமர், யூனூஸ் ஆகிய இருவரும் அறிவிக்கும் இந்த ஹதீஸில் (அதானில்) அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் (என இரண்டு தடவைகளே இடம் பெறுகின்றன.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயில் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 499)

171- بَابُ كَيْفَ الْأَذَانُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الطُّوسِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، قَالَ:

لَمَّا أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاقُوسِ يُعْمَلُ لِيُضْرَبَ بِهِ لِلنَّاسِ لِجَمْعِ الصَّلَاةِ طَافَ بِي وَأَنَا نَائِمٌ رَجُلٌ يَحْمِلُ نَاقُوسًا فِي يَدِهِ، فَقُلْتُ: يَا عَبْدَ اللَّهِ أَتَبِيعُ النَّاقُوسَ؟ قَالَ: وَمَا تَصْنَعُ بِهِ؟ فَقُلْتُ: نَدْعُو بِهِ إِلَى الصَّلَاةِ، قَالَ: أَفَلَا أَدُلُّكَ عَلَى مَا هُوَ خَيْرٌ مِنْ ذَلِكَ؟ فَقُلْتُ لَهُ: بَلَى، قَالَ: فَقَالَ: تَقُولُ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: ثُمَّ اسْتَأْخَرَ عَنِّي غَيْرَ بَعِيدٍ، ثُمَّ، قَالَ: وَتَقُولُ: إِذَا أَقَمْتَ الصَّلَاةَ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَلَمَّا أَصْبَحْتُ، أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، بِمَا رَأَيْتُ فَقَالَ: «إِنَّهَا لَرُؤْيَا حَقٌّ إِنْ شَاءَ اللَّهُ، فَقُمْ مَعَ بِلَالٍ فَأَلْقِ عَلَيْهِ مَا رَأَيْتَ، فَلْيُؤَذِّنْ بِهِ، فَإِنَّهُ أَنْدَى صَوْتًا مِنْكَ» فَقُمْتُ مَعَ بِلَالٍ، فَجَعَلْتُ أُلْقِيهِ عَلَيْهِ، وَيُؤَذِّنُ بِهِ، قَالَ: فَسَمِعَ ذَلِكَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ يَجُرُّ رِدَاءَهُ، وَيَقُولُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ رَأَيْتُ مِثْلَ مَا رَأَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلِلَّهِ الْحَمْدُ»

قَالَ أَبُو دَاوُدَ: هَكَذَا رِوَايَةُ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، وَقَالَ: فِيهِ ابْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَقَالَ مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ فِيهِ: اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَمْ يُثَنِّيَا


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-421.
Abu-Dawood-Shamila-499.
Abu-Dawood-Alamiah-421.
Abu-Dawood-JawamiulKalim-420.




 


4 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-16476 , 16477 , தாரிமீ-1224 , இப்னு மாஜா-706 , அபூதாவூத்-499 , 512 , 513 , திர்மிதீ-189


மேலும் பார்க்க: புகாரி-604 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.