தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-501

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூமஹ்தூரா (ரலி) அறிவிக்கும் மேலுள்ள ஹதீஸ் போன்றே இங்கு இடம் பெறுகின்றது. சுப்ஹு தொழுகையின் முந்திய அதானில் அஸ்லாத்து கைரும் மினன்னவ்ம் – அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம் என்று இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ் அபூமஷ்தூரா ——–> சாயிப் மற்றும் அப்துல் மலிகின் தாயார் ——–> உஸ்மான் பின் சாயிப் ——–> இப்னு ஜுரைஜ் ——–> அபூஆஸிம் மற்றும் அப்துர் ரஜாக் ஆகிய இருவர் வழியாக ஹஸன் பின் அலி அறிவிக்கும் ஹதீஸாகும். முதல் அதானுக்கு அதான் என்றும் இகாமத்திற்கு இரண்டாவது அதான் என்று சொல்லப் படும்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

அதான் சம்பந்தமாக முஸத்தத் அறிவிக்கும் ஹதீஸ் தெளிவானதாகும். அவர் தன்னுடைய அறிவிப்பில் அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு – அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலஸ்ஸலா – ஹய்ய அலல் ஃபலாஹ் – ஹய்ய அலல் ஃபலாஹ் – அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் – லாயிலாஹ இல்லல்லாஹு என இரண்டிரண்டு தடவை எனக்கு இகாமத்தை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள் என தெரிவிக்கின்றார்.

நீ இகாமத் சொல்லும் போது கத்காமதிஸ்ஸலா – கத்காமத்திஸ்ஸலா என இரண்டு தடவை சொல்க! என்றும் நான் சொன்னதை நீ செவியுற்றாயா? என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அப்துர் ரஸாக் தனது அறிவிப்பில் தெரிவிக்கின்றார். தன் நெற்றியை முடியை நபி (ஸல்) அவர்கள் தடவிவிட்ட காரணத்தால் அதை அமூமஷ்தூரா கத்தரிக்கவோ அல்லது ஒரேடியாக களையவோ இல்லை என்று சாயிப் தெரிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 501)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ السَّائِبِ، أَخْبَرَنِي أَبِي، وَأُمُّ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ، عَنْ أَبِي مَحْذُورَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

نَحْوَ هَذَا الْخَبَرِ وَفِيهِ: الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ فِي الْأُولَى مِنَ الصُّبْحِ،

قَالَ أَبُو دَاوُدَ: وَحَدِيثُ مُسَدَّدٍ أَبْيَنُ، قَالَ فِيهِ: قَالَ: وَعَلَّمَنِي الْإِقَامَةَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ،

وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ: وَإِذَا أَقَمْتَ فَقُلْهَا مَرَّتَيْنِ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، أَسَمِعْتَ؟ قَالَ: فَكَانَ أَبُو مَحْذُورَةَ، لَا يَجُزُّ نَاصِيَتَهُ وَلَا يَفْرُقُهَا لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ عَلَيْهَا


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-501.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.