தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போது ஷைத்தான் பாங்கை செவியுறக் கூடாது என்பதற்காக காற்று விட்டுக் கொண்டே பின்னோக்கி ஓட்டமெடுக்கின்றான். பாங்கு முடிக்கப்பட்டதும் முன்னோக்கி வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டதும் பின்னோக்கி ஓடுகின்றான். இகாமத் முடிந்ததும், முன்னோக்கி வந்து (தொழுகின்ற) ஒருவரின் உள்ளத்தில் இதை நினைத்துப் பார்! அதை நினைத்துப்பார்! என்று அவர் அது வரை நினைத்திராத செய்திகளை நினைவுபடுத்துகின்றான். இதனால் தொழுபவர் தான் எத்தனை (ரத்அத்துக்கள்) தொழுதோம் என்று தெரியாது போய்விடுகின்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 516)حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، وَيَقُولُ: اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَضِلَّ الرَّجُلُ أَنْ يَدْرِيَ كَمْ صَلَّى
AbuDawood-Tamil-516.
AbuDawood-Shamila-516.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்