தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-521

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம் : 178

பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் பிரார்த்தனை செய்தல்.

“பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது” என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(அபூதாவூத்: 521)

بَابُ مَا جَاءَ فِي الدُّعَاءِ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ زَيْدٍ الْعَمِّيِّ، عَنْ أَبِي إِيَاسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-521.
Abu-Dawood-Shamila-521.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-436.




إسناد ضعيف فيه زيد بن الحواري العمي وهو ضعيف الحديث (جوامع الكلم)

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16432-ஸைத் அல்அம்மீ நினைவாற்றலில் சரியில்லாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

1 . என்றாலும் இந்தக் கருத்தில் புரைத் பின் அபூமர்யம் —> அனஸ் (ரலி) வழியாக வந்துள்ள செய்தி சரியானதாகும் என இப்னுல் கத்தான் கூறியுள்ளார். (நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம் 5/227 ).

2 . இவ்வாறே  அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் சரியானது எனக் கூறியுள்ளனர். (இர்வா-244, தஃலீக் அஹ்மத்-12584)


சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-13357 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.