தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-527

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று முஅத்தின் சொல்லும் போது உங்களில் ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்றும், முஅத்தின் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லும் போது, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்றும் அவர் அஷ்ஹது அன் முஹம்மதர் ரசூலுல்லா, அஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹ் என்று சொன்னதும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹ் என்றும் பிறகு முஅத்தின் ஹய்ய அலஸ் ஸலாத் என்று சொன்னதும் லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்றும் பிறகு முஅத்தின் ஹய்ய அலல் பலாஹ் என்று சொல்லும் போது லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்றும் பிறகு முஅத்தின் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லும் போது அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்றும் மனப்பூர்வமாக சொல்வாரேயானல் அவர் நிச்சயமாக சொர்க்கம் சென்று விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)

(அபூதாவூத்: 527)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ حَبِيبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسَافٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

إِذَا قَالَ الْمُؤَذِّنُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، فَقَالَ: أَحَدُكُمْ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، فَإِذَا قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ


AbuDawood-Tamil-527.
AbuDawood-Shamila-527.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.