பாடம் : 181
அதான் முடியும் போது ஓத வேண்டிய துஆ.
நிறைவான இந்த அழைப்பிற்கும், நிரந்தமான இந்த தொழுகைக்கும் உரிய ரட்சகனே! இறைவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வஸீலாவையும் சிறப்பையும் அளிப்பாயாக! நீ அவர்களுக்கு வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! என்று அதானை செவியுறும் போது (அதற்கான பதில்களைக் கூறி கடைசியாக) சொல்பவருக்கு இறுதி நாளில் எனது ஷபாஅத் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)
(அபூதாவூத்: 529)181- بَابُ مَا جَاءَ فِي الدُّعَاءِ عِنْدَ الْأَذَانِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
مَنْ قَالَ: حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ
AbuDawood-Tamil-529.
AbuDawood-Shamila-529.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்