தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-533

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மஸ்ரூஹ் என்ற பெயர் கொண்ட உமர் (ரலி) அவர்களின் முஅத்தின் சுப்ஹு நேரத்திற்கு முந்தி அதான் சொல்லி விட்டார். அவருக்கு உமர் (ரலி) (அதானை திரும்பச் சொல்லுமாறு) உத்தரவிட்டார்கள் என்று மேலுள்ள ஹதீஸை போன்றே நாபிஃஉ வழியாக இந்த அறிவிப்பு இடம் பெறுகின்றது.

மஸ்ரூஹ் என்ற பெயரை கொண்ட அல்லது வேறு பெயர் கொண்ட உமர் (ரலி) அவர்களின் முஅத்தின் என்று நாபிஃஉ அல்லது வேறொருவர் மூலமாக உபைத்துல்லாஹ் பின் உமர் வழியாக ஹம்மாத் பின் சைத் அறிவிக்கின்றார்.

உமர் (ரலி) அவர்களிடம் மஸ்வூத் என்ற பெயர் கொண்ட முஅத்தின் இருந்தார் என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தை இப்னு உமர் (ரலி) நாபிஃ ——–> உபைத்துல்லாஹ் வழியாக தராவர்தி அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பே சரியானதாகும் என இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்.

(அபூதாவூத்: 533)

حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ، أَخْبَرَنَا نَافِعٌ عَنْ مُؤَذِّنٍ لِعُمَرَ يُقَالُ لَهُ مَسْرُوحٌ

أَذَّنَ قَبْلَ الصُّبْحِ فَأَمَرَهُ عُمَرُ فَذَكَرَ نَحْوَهُ، قَالَ أَبُو دَاوُدَ: وَقَدْ رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ أَوْ غَيْرِهِ أَنَّ مُؤَذِّنًا لِعُمَرَ، يُقَالُ لَهُ: مَسْرُوحٌ أَوْ غَيْرُهُ

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ لِعُمَرَ مُؤَذِّنٌ، يُقَالُ: لَهُ مَسْعُودٌ وَذَكَرَ نَحْوَهُ وَهَذَا أَصَحُّ مِنْ ذَاكَ


AbuDawood-Tamil-533.
AbuDawood-Shamila-533.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.