தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-539

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 189

உட்கார்ந்துக் கொண்டே இமாம் வரும் வரை மக்கள் காத்திருத்தல்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் என்னை காணும் வரை நீங்கள் எழுந்திருக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் தொடர் : 

அபூகதாதா ——–> அவரது மகன் அப்துல்லாஹ் ——–> மூஸாபின் இஸ்மாயீல் ஆகிய இருவர்.

(அபூகதாதா அவரது மகன் அப்துல்லாஹ்வுக்கு அறிவித்தார், அப்துல்லாஹ் எனக்கு அறிவித்தார் என்று அறிவிக்காமல்) அபூகதாதா மூலம் ——–> அப்துல்லாஹ் மூலம் என யஹ்யா அறிவிக்கின்றார்.

இதே மாதிரிதான் யஹ்யாவிடமிருந்து அய்யூப், ஹஜ்ஜாஜ் அஸ்ஸவ் வாப் ஆகியோர் அறிவிக்கின்றனர்.

எனக்கு இந்த ஹதீஸை யஹ்யா எழுதி கொடுத்தார் என ஹிஷாம் அத்-தஸ்தாவிய்யு என்பவர் தெரிவிக்கின்றார்.

நீங்கள் அமைதியாக என்னை காணும் வரை எழுந்திருக்க வேண்டாம் என இந்த ஹதீஸை யஹ்யாவிடமிருந்து முஆவியா பின் சலாம், அலி பின் முபாரக் ஆகியோர் அறிவிக்கின்றனர்.

(அபூகதாதா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)

(அபூதாவூத்: 539)

189- بَابٌ فِي الصَّلَاةِ تُقَامُ وَلَمْ يَأْتِ الْإِمَامُ يَنْتَظِرُونَهُ قُعُودًا

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَا: حَدَّثَنَا أَبَانُ، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي»

قَالَ أَبُو دَاوُدَ: هَكَذَا رَوَاهُ أَيُّوبُ، وَحَجَّاجٌ الصَّوَّافُ، عَنْ يَحْيَى، وَهِشَامٍ الدَّسْتُوَائِيِّ، قَالَ: كَتَبَ إِلَيَّ يَحْيَى، وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، وَعَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى، وَقَالَا فِيهِ: «حَتَّى تَرَوْنِي وَعَلَيْكُمُ السَّكِينَةَ»


AbuDawood-Tamil-539.
AbuDawood-Shamila-539.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.