தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பிறகு பேசிக் கொண்டிருப்பவர் தொடர்பாக சாபித் அல்பனானி என்பவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாக அறிவிக்கின்றார்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. அவ்வாறு இகாமத் சொல்லப் பட்டு விட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் குறுக்கிட்டு (பேசத் துவங்கினார்) இகாமத் சொல்லப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருடன் பேச விடாமல் இருந்து விட்டார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரியிலம் இடம் பெறுகின்றது.)
(அபூதாவூத்: 542)حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، عَنْ حُمَيْدٍ، قَالَ
سَأَلْتُ ثَابِتًا الْبُنَانِيَّ، عَنِ الرَّجُلِ يَتَكَلَّمُ بَعْدَمَا تُقَامُ الصَّلَاةُ فَحَدَّثَنِي، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلَاةُ فَعَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلَاةُ»
AbuDawood-Tamil-542.
AbuDawood-Shamila-542.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்