பாடம் : 190
ஜமாஅத்தை விடுவதின் கடுமை.
“ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் தொழுகை நிலை நாட்டப் படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி)
ஜமாஅத்தை கடைபிடித்து கொள்க! என்றால் கூட்டுத் தொழுகையை கடைபிடித்துக் கொள்க! என்று விளக்கம் ஆகும் என ஸாயிப் கூறியதாக ஸாயிதா தெரிவிக்கின்றார்.
(அபூதாவூத்: 547)190- بَابٌ فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زَائِدَةُ، حَدَّثَنَا السَّائِبُ بْنُ حُبَيْشٍ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمُرِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمُ الصَّلَاةُ إِلَّا قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ، فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ»
قَالَ زَائِدَةُ: قَالَ السَّائِبُ: يَعْنِي بِالْجَمَاعَةِ: الصَّلَاةَ فِي الْجَمَاعَةِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-547.
Abu-Dawood-Shamila-547.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-459.
இந்த அறிவிப்பாளர் தொடரில் வரும் ஷுஐப் இப்னு ஹிப்ஸ் என்பவர் இடம் பெறுகிறார்.
இவர் நம்பகமானவர் என்று அல் இஜ்லீ(ரஹ்) கூறியுள்ளார்கள்
அல் திகாத் அல் இஜ்லீ-1/170
இப்னு ஹஜர் அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.
தக்ரீப் அல் தஹ்தீப்-228
அதனால் இது நடுத்தரமான செய்தி ஆகும்
இது நடுத்தரமான செய்தி என்று அல்பானீ அவர்கள் கூறினார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.