தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-557

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(மதீனாவில்) ஒருவர் இருந்தார். மதீனாவாசிகளில் இந்த கிப்லாவை நோக்கி தொழக்கூடிய மக்களில் அவரைவிட பள்ளியிலிருந்து வீடு தூரமாக அமைந்த யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவருக்கு எந்த தொழுகைமே தவறுவது கிடையாது! கடுமையான வெப்பத்திலும் இருளிலும் நீ ஏறிவருவதற்கு ஒரு கழுதையை வாங்கினால் நான்றாக இருக்குமல்லவா? என நான் கேட்டதற்கு என்னுடைய வீடு பள்ளிக்கருகில் இருப்பதை நான் விரும்பவில்லை என பதிலளித்தார்.

இந்த செய்தி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர்கள் அவரிடம் அதைப்பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர் பள்ளிக்கு நான் வருவதும், (தொழுது விட்டு) திரும்பும் போது நான் வீட்டிற்கு செல்வதும் பதியப்பட வேண்டும் என விரும்புகின்றேன் என்று பதில் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதை அனைத்தையும் அல்லாஹ் உனக்கு வழங்குவானாக! (அல்லாஹ்வுக்காக) நீ விரும்பிய அனைத்தையும் அல்லாஹ் உனக்கு வழங்குவானாக! என்று சொன்னார்கள்.

இவ்வாறு உபை பின் கஃப் அறிவிக்கின்றார்கள்.

இதே கருத்தில் உள்ள ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.

(அபூதாவூத்: 557)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، أَنَّ أَبَا عُثْمَانَ حَدَّثَهُ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ

كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ أَحَدًا مِنَ النَّاسِ مِمَّنْ يُصَلِّي الْقِبْلَةَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ أَبْعَدَ مَنْزِلًا مِنَ الْمَسْجِدِ مِنْ ذَلِكَ الرَّجُلِ، وَكَانَ لَا تُخْطِئُهُ صَلَاةٌ فِي الْمَسْجِدِ، فَقُلْتُ: لَوِ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الرَّمْضَاءِ وَالظُّلْمَةِ، فَقَالَ: مَا أُحِبُّ أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ فَنُمِيَ الْحَدِيثُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ قَوْلِهِ ذَلِكَ، فَقَالَ: أَرَدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُكْتَبَ لِي إِقْبَالِي إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِلَى أَهْلِي إِذَا رَجَعْتُ، فَقَالَ: «أَعْطَاكَ اللَّهُ ذَلِكَ كُلَّهُ، أَنْطَاكَ اللَّهُ جَلَّ وَعَزَّ مَا احْتَسَبْتَ كُلَّهُ أَجْمَعَ»


AbuDawood-Tamil-557.
AbuDawood-Shamila-557.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.