தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-560

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஜமாஅத்தில் (ஒருவர்) தொழும் தொழுகை இருபத்தைந்து தொழுகைகளுக்கு சமமாகும். ருகூஃஐயும், சுஜுதையும் நிறைவுபடுத்தி அந்த தொழுகையை, பாலைவனத்தில் அவர் தொழும் தொழுகை ஐம்பது தொழுகைகளின் தரத்தை அடைந்து விடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூசயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

அப்துல் வாஹித் பின் ஜியாத் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஜமாஅத்தில் சேர்ந்து ஒருவர் தொழும் தொழுகையைவிட பாலைவனத்தில் அவர் தொழுகைக்கு இருமடங்கு நன்மைகள் அதிகரிக்கப்படுகின்றன என்று அறிவித்துதனத அறிவிப்பை தொடர்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் சுருக்கமாக இடம் பெறுகின்றது.)

(அபூதாவூத்: 560)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِلَالِ بْنِ مَيْمُونٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«الصَّلَاةُ فِي جَمَاعَةٍ تَعْدِلُ خَمْسًا وَعِشْرِينَ صَلَاةً، فَإِذَا صَلَّاهَا فِي فَلَاةٍ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا بَلَغَتْ خَمْسِينَ صَلَاةً»

قَالَ أَبُو دَاوُدَ: قَالَ عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، فِي هَذَا الْحَدِيثِ «صَلَاةُ الرَّجُلِ فِي الْفَلَاةِ تُضَاعَفُ عَلَى صَلَاتِهِ فِي الْجَمَاعَةِ» وَسَاقَ الْحَدِيثَ


AbuDawood-Tamil-560.
AbuDawood-Shamila-560.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.