தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-575

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 200

வீட்டில் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் நடக்கும்போது ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுதல்.

யசீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நான் இளைஞராக இருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் பள்ளியின் ஓரத்தில் இரண்டு பேர் தொழாமல் இருந்தனர். அவ்விருவரும் பயத்தின் காரணமாக நடுங்கிய நிலையில் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டனர். நீங்கள் இருவரும் எங்களுடன் சேர்ந்து தொழுவதற்கு என்ன தடை என்று நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் கேட்ட போது நாங்கள் இருவரும் வீடுகளில் தொழுது விட்டோம் என்று பதிலளித்தனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களில் ஒருவர் தனது வீட்டில் தொழுதுவிட்டு (பள்ளிக்கு வரும்போது) தொழுகையை முடிக்காத நிலையில் இமாமை அடைந்து விடின் இமாமுடனும் அவர் சேர்ந்து தொழுவாராக! ஏனெனில் நிச்சயமாக அந்த தொழுகை அவருக்கு நபிலாக ஆகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் யஸீத் (ரஹ்)

(அபூதாவூத்: 575)

بَابٌ فِيمَنْ صَلَّى فِي مَنْزِلِهِ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ يُصَلِّي مَعَهُمْ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ،

أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ غُلَامٌ شَابٌّ، فَلَمَّا صَلَّى إِذَا رَجُلَانِ لَمْ يُصَلِّيَا فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَدَعَا بِهِمَا فَجِئَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا، فَقَالَ: «مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا؟» قَالَا: قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا، فَقَالَ: «لَا تَفْعَلُوا، إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ أَدْرَكَ الْإِمَامَ وَلَمْ يُصَلِّ، فَلْيُصَلِّ مَعَهُ فَإِنَّهَا لَهُ نَافِلَةٌ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-575.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-487.




மேலும் பார்க்க: நஸாயீ-858 .

2 comments on Abu-Dawood-575

  1. சலாம்.

    இந்த ஹதீஸிற்கு தமிழ் மொழியாக்கமும் , ஹதீஸ் தரமும் இல்லை

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. இதற்கு தமிழ் மொழியாக்கமும் , ஹதீஸ் தரமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.