தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-58

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இரவு தங்கியிருந்தேன். அவர்கள் தூக்கத் திலிருந்து எழுந்து உலூச் செய்யும் தண்ணீர் அருகில் வந்து பற்குச்சியால் பல் துலக்கினார்கள். பிறகு, வானங்கள் பூமிகளை படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி ‎வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சய மாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன (3 : 90) ‎என்ற வசனங்களை கொண்ட (ஆல இம்ரான்) அத்தியாயத்தை முடிக்கும் அளவுக்கு ‎ஓதினார்கள் அல்லது ஓதி முடித்து விட்டார்கள். பின்பு உலூச் செய்து தமது தொழும் ‎இடத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பிறகு தமது படுக்கைக்கு வந்து ‎அல்லாஹ் நாடிய அளவுக்கு தூங்கினார்கள். பிறகு கண் விழித்து முன்பு போல ‎நடந்து கொண்டார்கள். (இவ்வாறு) ஒவ்வொரு முறையும் பல் துலக்கி இரண்டு ‎ரக்அத்துகள் தொழுதார்கள். பிறகு வித்ரு தொழுதார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

இந்த ஹதீஸை இப்னு புலைல் அவர்கள் ஹுசைன் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ‎போது நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கி உலூச் செய்தார்கள். அப்போது வானங்கள் ‎பூமியின் படைப்பில் என்ற (3 : 190வது) வசனத்தை ஓதத் தொடங்கி அந்த ‎அத்தியாயத்தை முடிக்கும் வரை ஓதினார்கள் என்று அறிவிக்கின்றார்.‎

குறிப்பு : இந்த கருத்து முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.‎

(அபூதாவூத்: 58)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ

بِتُّ لَيْلَةً عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا اسْتَيْقَظَ مِنْ مَنَامِهِ، أَتَى طَهُورَهُ فَأَخَذَ سِوَاكَهُ فَاسْتَاكَ، ثُمَّ تَلَا هَذِهِ الْآيَاتِ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ} حَتَّى قَارَبَ أَنْ يَخْتِمَ السُّورَةَ – أَوْ خَتَمَهَا – ثُمَّ تَوَضَّأَ فَأَتَى مُصَلَّاهُ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ فَنَامَ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اسْتَيْقَظَ [ص:16] فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ فَنَامَ، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ مِثْلَ ذَلِكَ، ثُمَّ رَجَعَ إِلَى فِرَاشِهِ فَنَامَ، ثُمَّ اسْتَيْقَظَ فَفَعَلَ مِثْل ذَلِكَ كُلُّ ذَلِكَ، يَسْتَاكُ وَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ “،

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ ابْنُ فُضَيْلٍ، عَنْ حُصَيْنٍ، قَالَ: فَتَسَوَّكَ وَتَوَضَّأَ، وَهُوَ يَقُولُ: «{إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ}» حَتَّى خَتَمَ السُّورَةَ


AbuDawood-Tamil-58.
AbuDawood-Shamila-58.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.