தன் சமூகத்தாருடன் எனது தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு திரும்ப எண்ணிய போது, அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு யார் தொழுவிக்க வேண்டும்? என்று வினவிய போது, உங்களில் குர்ஆனை அதிகமாக திரட்டியவர் அல்லது குர்ஆனை மனனம் செய்தவர் தொழுவிப்பாராக! என்று சொன்னார்கள். சிறுவனாக இருந்துக் கொண்டு மக்களில் நான் குர்ஆனை திரட்டியது போன்று வேறு யாரும் திரட்டியிருக்கவில்லை! என்னிடம் ஒரே ஒரு சால்வைதான் இருந்தது. ஜரீம் கிளையாரின் எந்த ஒரு கூட்டத்தில் நான் கலந்துக் கொண்டாலும் நான் தான் (அவர்களது) இமாமாக தவறியதில்லை. இன்றைய நாள் வரை அவர்களில் இறந்தவர்களுக்கு நான் தான் ஜனாஸா தொழுவித்துக் கொண்டிருக்கின்றேன் என்று அம்ரு பின் ஸலாமா (ரலி) அறிவிக்கின்றார்கள். தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
“என்னுடைய கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது’ என தன் தந்தையிடமிருந்து அறிவிப்பதாக குறிப்பிடாமல் அம்ர் பின் ஸலமா அறிவிக்கும் ஹதீஸை அம்ர் பின் ஸலமா, மிஸ்அர் பின் ஹபீப் வாயிலாக யசீத் பின் ஹாரூன் அறிவிக்கின்றார்.
குறிப்பு : இது மாதிரியான ஹதீஸ் புகாரியிலும் இதே ஹதீஸ் நஸயீயிலும் இடம் பெறுகின்றது.
(அபூதாவூத்: 587)حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرِ بْنِ حَبِيبٍ الْجَرْمِيِّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ سَلَمَةَ، عَنْ أَبِيهِ
أَنَّهُمْ وَفَدُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَرَادُوا أَنْ يَنْصَرِفُوا، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَؤُمُّنَا، قَالَ: «أَكْثَرُكُمْ جَمْعًا لِلْقُرْآنِ» أَوْ «أَخْذًا لِلْقُرْآنِ» قَالَ: فَلَمْ يَكُنْ أَحَدٌ مِنَ الْقَوْمِ جَمَعَ مَا جَمَعْتُهُ، قَالَ: فَقَدَّمُونِي وَأَنَا غُلَامٌ وَعَلَيَّ شَمْلَةٌ لِي، فَمَا شَهِدْتُ مَجْمَعًا مِنْ جَرْمٍ إِلَّا كُنْتُ إِمَامَهُمْ، وَكُنْتُ أُصَلِّي عَلَى جَنَائِزِهِمْ إِلَى يَوْمِي هَذَا
قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ مِسْعَرِ بْنِ حَبِيبٍ الْجَرْمِيِّ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ قَالَ: لَمَّا وَفَدَ قَوْمِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَقُلْ عَنْ أَبِيهِ
AbuDawood-Tamil-587.
AbuDawood-Shamila-587.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்