தொழுகை நேரம் வந்துவிட்டால் நீங்கள் இருவரும் பாங்கு சொல்லுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். பிறகு உங்களில் பெரியவர் தொழுவிப்பாராக என்று தன்னிடமோ அல்லது தன் நண்பரிடமோ சொன்னார்கள் என மாலிக் பின் அல்ஹுவைரிஸ் அறிவிக்கின்றார்.
அறிவிப்பாளர் வரிசை
(1) மாலிக் பின் அல்ஹுவைரிஸ் – அபூ கிலாபா – காலித் – மஸ்லமா பின் முஹம்மத் – முஸத்தத்
(2) மாலிக் பின் அல்ஹுவைரிஸ் – அபூ கிலாபா – காலித் – இஸ்மாயீல் – முஸத்தத்
அன்றைய தினம் கல்வியில் இருவரும் ஒத்த நிலையில் இருந்தனர் என மஸ்லமா அறிவிக்கும் ஹதீஸில் உள்ளது.
குர்ஆனை ஓதுவரில் இருவரின் நிலை எப்படி? என நான் அபூகிலாபாவிடம் கேட்டபோது அவ்விருவரும் குர்ஆன் ஓதுவரில் சமநிலையில் இருந்தனர் என பதிலளித்தார் என காலித் சொல்வதாக இஸ்மாயிலுடைய ஹதீஸில் இடம்பெறுகின்றது.
குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் விரிவாகவும் சுருக்கமாகவும் இடம்பெறுகின்றது.
(அபூதாவூத்: 589)حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ مُحَمَّدٍ الْمَعْنَى وَاحِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: أَوْ لِصَاحِبٍ لَهُ: «إِذَا حَضَرَتِ الصَّلَاةُ، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا سِنًّا»، وَفِي حَدِيثِ مَسْلَمَةَ، قَالَ: وَكُنَّا يَوْمَئِذٍ مُتَقَارِبَيْنِ فِي الْعِلْمِ، وَقَالَ: فِي حَدِيثِ إِسْمَاعِيلَ: قَالَ خَالِدٌ: قُلْتُ لِأَبِي قِلَابَةَ: فَأَيْنَ الْقُرْآنُ؟، قَالَ: إِنَّهُمَا كَانَا مُتَقَارِبَيْنِ
AbuDawood-Tamil-589.
AbuDawood-Shamila-589.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்