தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-594

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 207

நல்லவரும், கெட்டவரும் தொழுவித்தல்.

கடமையான தொழுகையை ஒவ்வொரு முஸ்லிமுக்கு பின்னால் நின்று தொழுவது கடமையாகும். அவர் நல்லவராக இருப்பினும் சரியே! பெரும்பாவம் செய்கின்ற தீயவராக இருப்பினும் சரியே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 594)

207- بَابُ إِمَامَةِ الْبَرِّ وَالْفَاجِرِ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنِ الْعَلَاءِ بْنِ الْحَارِثِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«الصَّلَاةُ الْمَكْتُوبَةُ وَاجِبَةٌ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ»


Abu-Dawood-Tamil-594.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-594.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-501.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45233-மக்ஹூல் அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என அபூஸுர்ஆ அவர்கள் கூறியுள்ளார். (நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1058). எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர்தொடர் என்பதால் பலவீனமானதாகும்.
  • இந்தக் கருத்தில் எந்த சரியான செய்தியும் இல்லை என்று பல ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். (நூல்: அத்தல்கீஸ் 2/75)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-594 , 2533 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6310 , தாரகுத்னீ-1759 , 1764 , 1768 , குப்ரா பைஹகீ-5300 , 6832 , 16770 ,

5 comments on Abu-Dawood-594

  1. ஆப்ஸ் வடிவிலுள்ள அபூதாவூத் படம் 206 என்று உள்ளது நிங்கள் பாடம் 207 என்று பதிவு செய்து உள்ளீர்கள் இதில் எது சரியானது

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      பிரதிகள் பல இருப்பதாலும் ஒவ்வொன்றின் கணக்கீடு முறைகளும் மாறுபடுவதால் இந்த வித்தியாசம் உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.