பாடம் : 32
உளூ இருக்க உளூ செய்தல்.
நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தபோது லுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதும் அவர்கள் உலூச் செய்து தொழுதார்கள். அஸர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதும் அவர்கள் உலூச் செய்தார்கள். அப்போது நான் (உலூச் செய்வதற்கான காரணத்தை) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் யார் உலூவுடன் இருக்க மீண்டும் உலூச் செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து நன்மைகளை எழுதி விடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல் லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார்கள். இதை குதைஃப் அறிவிக் கிறார். முஸத்தத் அவர்களின் இந்த ஹதீஸ் பூரணமானது என இமாம் அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னு மாஜா ஆகியவற்றிலும் இடம் பெற்றுள்ளது. இமாம் திர்மிதீ அவர்கள் இதை பலவீனமான ஹதீஸ் என குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அப்துர் ரஹ்மான் பின் ஸியாத் அல் அப்ஃரீகீ பலவீனமானவர். மேலும் இவர் தத்லீஸ் செய்பவரும் ஆவார்.
தத்லீஸ் என்பவர், ஒரு அறிவிப்பாளர் தனக்கு முந்தைய அறிவிப்பாளரிடம் எதையும் செயியுறாமல் அவரது பெயரை பயன் படுத்துவதாகும்.
(அபூதாவூத்: 62)32- بَابُ الرَّجُلِ يُجَدِّدُ الْوُضُوءَ مِنْ غَيْرِ حَدَثٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ قَالَ أَبُو دَاوُدَ: وَأَنَا لِحَدِيثِ ابْنِ يَحْيَى أَتْقَنُ عَنْ غُطَيْفٍ، وَقَالَ مُحَمَّدٌ: عَنْ أَبِي غُطَيْفٍ الْهُذَلِيِّ، قَالَ
كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، فَلَمَّا نُودِيَ بِالظُّهْرِ تَوَضَّأَ فَصَلَّى، فَلَمَّا نُودِيَ بِالْعَصْرِ تَوَضَّأَ، فَقُلْتُ لَهُ، فَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ عَشْرَ حَسَنَاتٍ»،
قَالَ أَبُو دَاوُدَ: وَهَذَا حَدِيثُ مُسَدَّدٍ وَهُوَ أَتَمُّ
AbuDawood-Tamil-62.
AbuDawood-Shamila-62.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்