தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-66

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 34

புழாஆ என்ற கிணறு.

மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத்துண்டும், நாற்றமான பொருட்களும் ‎போடப்படுகின்ற புழாஆ என்ற கிணற்று நீரில் நாங்கள் உலூச் செய்யலாமா? என்று ‎அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது, தண்ணீர் ‎தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப் படுத்தாது என்று ‎நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்ததாக அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். ‎

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் ராபிஃ என்ற பெயருக்கு பதிலாக ‎அப்துர் ரஹ்மான் பின் ராபிஃ என சிலர் அறிவிப்பதாக இமாம் அபூதாவூது ‎குறிப்பிடுகிறார்கள்.‎

(அபூதாவூத்: 66)

34- بَابُ مَا جَاءَ فِي بِئْرِ بُضَاعَةَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْأَنْبَارِيُّ، قَالُوا: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ

أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»

قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ بَعْضُهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ رَافِعٍ


AbuDawood-Tamil-66.
AbuDawood-Shamila-66.
AbuDawood-JawamiulKalim-.




‎(குறிப்பு: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, தராகுத்னீ, ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
பைஹகி, தாரிமி ஆகிய ‎நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)‎

2 comments on Abu-Dawood-66

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஜஸாகல்லாஹு கைரா. பிழை திருத்தப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.