தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-67

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நாய்களின் மாமிசத் துண்டங்களும், மாதவிடாய்த் துணிகளும் மக்களின் கழிவுப் ‎பொருட்களும் கொட்டப்படும் புழாஆ கிணற்றிலிருந்து உங்களுக்கு நீர் கொண்டு ‎வரப்படுகிறதே? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப் பட்ட போது ‎நிச்சயமாக தண்ணீர் தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை ‎அசுத்தப் படுத்தாது என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததை நான் செவியுற்றேன் ‎என அபூஸயிதுல் குத்ரி (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

புழாஆ கிணற்றை பராமரிப்பவரிடம் அதன் ஆழத்தைப் பற்றி கேட்டேன். அதற்கு ‎அவர் அதிக பட்ச தண்ணீர் அளவு அடிவயிறு வரை இருக்கும் என்றார் நான் அதன் ‎குறைந்த பட்ச தண்ணீர் அளவு பற்றி கேட்டதற்கு முட்டுக் காலுக்குக் கீழ் இருக்கும் ‎என்று அவர் கூறியதாக குதைபா பின்ஸயீது அவர்கள் கூற நான் செவியுற்றேன் என ‎இமாம் அவூதாவூது குறிப்பிடுகின்றார்கள்.‎

நான் புழாஆ கிணற்றின் மேல் என் மேலாடையை விரித்து அளவெடுத்தேன். பிறகு ‎நான் அதை அளந்தபோது அதன் அகலம் ஆறு முழம் இருந்தது. எனக்காக தோட்டக் ‎கதவைத் திறந்து என்னை அங்கு அனுமதித்த வாயிற் காப்பாளரிடம் ஏற்கனவே ‎இருந்த அமைப்பை விட்டும் இக்கிணற்றின் அமைப்பு மாறியுள்ளதா? எனக் கேட்டபோது ‎அவர் இல்லை என்று சொன்னார் என இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிட்டு விட்டு ‎அப்போது அக்கிணற்றின் தண்ணீருடைய நிறம் மாறிப்போய் இருக்கக் கண்டேன் என்று ‎குறிப்பிடுகிறார்கள்.‎

‎(குறிப்பு: அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ, ஷாபி ‎‎(அல்உம்மு) போன்ற நூல்களிலும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது.)‎

(அபூதாவூத்: 67)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ يَحْيَى الْحَرَّانِيَّانِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَلِيطِ بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ الْأَنْصَارِيِّ ثُمَّ الْعَدَوِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُقَالُ لَهُ

إِنَّهُ يُسْتَقَى لَكَ مِنْ بِئْرِ بُضَاعَةَ، وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا لُحُومُ الْكِلَابِ، وَالْمَحَايِضُ وَعَذِرُ النَّاسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ»

قَالَ أَبُو دَاوُدَ: وسَمِعْت قُتَيْبَةَ بْنَ سَعِيدٍ، قَالَ: سَأَلْتُ قَيِّمَ بِئْرِ بُضَاعَةَ عَنْ عُمْقِهَا؟ قَالَ: أَكْثَرُ مَا يَكُونُ فِيهَا الْمَاءُ إِلَى الْعَانَةِ، قُلْتُ: فَإِذَا نَقَصَ، قَالَ: دُونَ الْعَوْرَةِ، قَالَ أَبُو دَاوُدَ: ” وَقَدَّرْتُ أَنَا بِئْرَ بُضَاعَةَ بِرِدَائِي مَدَدْتُهُ عَلَيْهَا، ثُمَّ ذَرَعْتُهُ فَإِذَا عَرْضُهَا سِتَّةُ أَذْرُعٍ، وَسَأَلْتُ الَّذِي فَتَحَ لِي بَابَ الْبُسْتَانِ فَأَدْخَلَنِي إِلَيْهِ، هَلْ غُيِّرَ بِنَاؤُهَا عَمَّا كَانَتْ عَلَيْهِ؟ قَالَ: لَا، وَرَأَيْتُ فِيهَا مَاءً مُتَغَيِّرَ اللَّوْنِ


AbuDawood-Tamil-67.
AbuDawood-Shamila-67.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.