தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-76

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஹரீஸா (என்ற ஒரு வகை மாவு பண்டத்தை) அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‎கொடுத்து விடுமாறு எனது தாயாரை அவர்களது எஜமானி அனுப்பி வைத்தார். ‎அங்கே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கக் கண்டார்கள். ‎அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் எனது தாயாரை நோக்கி நீ அதை அங்கு வைத்து ‎விடு எனச் சாடை காட்டினார்கள். அப்போது ஒரு பூனை வந்து அதை தின்றது. ‎ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது முடித்த பின்னர் பூனை வாய் வைத்து தின்ற அதே ‎இடத்திலிருந்து சாப்பிட்டார்கள். பூனைகள் அசுத்தமானவை அல்ல. அவை ‎உங்களையே சுற்றித் திரிந்து உங்களை அண்டி வாழ்பவை என்று அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) கூறி விட்டு பூனையின் எச்சில் நீரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‎அவர்கள் உலூச் செய்ய நான் கண்டிருக்கிறேன் எனவும் சொன்னார்கள். இதை தாவூத் ‎பின் ஸாலிஹ் பின் தீனார் அத்தம்மார் தனது தாயார் மூலம் அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இந்த தாவூத் பின் ஸாலிஹ் அவர்களின் தாயார் ஹதீஸ் கலையில் யாரென ‎தெரியாதவர்)‎

(அபூதாவூத்: 76)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ دَاوُدَ بْنِ صَالِحِ بْنِ دِينَارٍ التَّمَّارِ، عَنْ أُمِّهِ

أَنَّ مَوْلَاتَهَا أَرْسَلَتْهَا بِهَرِيسَةٍ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَوَجَدَتْهَا تُصَلِّي، فَأَشَارَتْ إِلَيَّ أَنْ ضَعِيهَا، فَجَاءَتْ هِرَّةٌ، فَأَكَلَتْ مِنْهَا، فَلَمَّا انْصَرَفَتْ أَكَلَتْ مِنْ حَيْثُ أَكَلَتِ الْهِرَّةُ، فَقَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ»، وَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِفَضْلِهَا


AbuDawood-Tamil-76.
AbuDawood-Shamila-76.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.