பாடம் : 42
நபீத் என்ற பானத்தில் உளூச் செய்தல்.
ஜின்கள் வருகை தந்த இரவில் அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களை நோக்கி உம்முடைய தோல் பாத்திரத்தில் என்ன உள்ளது? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ்பின் மஸ்வூது (ரலி) அவர்கள் நபீத் என பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அதில் போடப் பட்டுள்ளது) நல்ல பேரீத்தம் பழமாகும் (இந்த) தண்ணீரும் தூய்மையானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்களிடமிருந்து அபூஸைத் என்பவர் அறிவிக்கிறார்.
அபூஸைத் அல்லது ஸைத் கூறுவதாக ஷரீக் தெரிவிக்கிறார் என அறிவிப்பாளர் சுலைமான் பின் தாவூது குறிப்பிடுவதாக இமாம் அபூதாவூது கூறுகிறார்கள். ஹன்னாத் அவர்கள் ஜின் கள் வருகை தந்த இரவு என்ற வாசகத்தைக் குறிப்பிடவில்லை.
(குறிப்பு: திர்மிதீ, இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூஸைத் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானது என ஹதீஸ்கலை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
(அபூதாவூத்: 84)42- بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ
حَدَّثَنَا هَنَّادٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالَا: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ أَبِي زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ: «مَا فِي إِدَاوَتِكَ؟»، قَالَ: نَبِيذٌ، قَالَ: «تَمْرَةٌ طَيِّبَةٌ وَمَاءٌ طَهُورٌ»
قَالَ أَبُو دَاوُدَ: وَقَالَ: سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ أَبِي زَيْدٍ، أَوْ زَيْدٍ، كَذَا قَالَ شَرِيكٌ، وَلَمْ يَذْكُرْ هَنَّادٌ لَيْلَةَ الْجِنِّ
AbuDawood-Tamil-84.
AbuDawood-Shamila-84.
AbuDawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்