தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-1047

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெண்களுக்கு ஸலாம் கூறுதல்.

அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுக்குள் சென்றார்கள். அங்கு பெண்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் கையால் அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள்.

மேலும், “உங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்கு நன்றி மறப்பதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்கு நன்றி மறப்பதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அவர்களில் ஒரு பெண் கூறினார்: “அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம். அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறப்பதா? என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆம், உங்களில் ஒருத்தி நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் இருப்பாள். (பிறகு அவளுக்கு திருமணம் நடைபெறும்). பின்னர் அவள் கோபம் கொண்டு, ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் என் கணவனிடம் ஒரு மணிநேரம் கூட நன்மை காணவில்லை’ என்று கூறுவாள். இது அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறப்பதாகும். இது உபகாரம் செய்தவர்களின் அருட்கொடைகளுக்கு நன்றி மறப்பதாகும்.

(al-adabul-mufrad-1047: 1047)

بَابُ التَّسْلِيمِ عَلَى النِّسَاءِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ، عَنْ شَهْرٍ قَالَ: سَمِعْتُ أَسْمَاءَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ فِي الْمَسْجِدِ، وَعُصْبَةٌ مِنَ النِّسَاءِ قُعُودٌ، قَالَ بِيَدِهِ إِلَيْهِنَّ بِالسَّلَامِ، فَقَالَ: «إِيَّاكُنَّ وَكُفْرَانَ الْمُنْعِمِينَ، إِيَّاكُنَّ وَكُفْرَانَ الْمُنْعِمِينَ» ، قَالَتْ إِحْدَاهُنَّ: نَعُوذُ بِاللَّهِ، يَا نَبِيَّ اللَّهِ، مِنْ كُفْرَانِ نِعَمِ اللَّهِ، قَالَ: ” بَلَى إِنَّ إِحْدَاكُنَّ تَطُولُ أَيْمَتُهَا، ثُمَّ تَغْضَبُ الْغَضْبَةَ فَتَقُولُ: وَاللَّهِ مَا رَأَيْتُ مِنْهُ سَاعَةً خَيْرًا قَطُّ، فَذَلِكَ كُفْرَانُ نِعَمِ اللَّهِ، وَذَلِكَ كُفْرَانُ نِعَمِ الْمُنْعِمِينَ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-1047.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-2697.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.