தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-1505

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஷஹ்ர் பின் ஹவ்ஷப் கூறியதாவது:

“ஒரு மனிதர் தனக்கு ஏவப்பட்ட முறையில் உளூ (அங்கத் தூய்மை) செய்தால் அவர் செய்திருந்த (சிறு) பாவங்கள் அவருடைய செவி, பார்வை , கைகள், கால்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறிவிடுகின்றன,

என்ற செய்தியை நான், நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ஒன்றிலிருந்து ஆறு தடவைகள்) கேட்காமல் இருந்திருந்தால் இந்த செய்தியை நான் அறிவித்திருக்க மாட்டேன் என அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அபூளப்யா (ரஹ்) அவர்கள் எங்களுடன் அமர்ந்திருக்கும்போது,  மேற்கண்ட செய்தியை, அம்ர் பின் அபஸா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்ததையும் நீ செவியேற்கவில்லையா என்று கூறிவிட்டு நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

மேலும், “யார் இரவில் உளூ செய்து அல்லாஹ்வின் நினைவுடன் தூங்குகிறாரோ அவர் இரவில் (படுக்கையில்) புரளும் நேரமெல்லாம், அவர் அல்லாஹ்விடத்தில் கேட்கும் இம்மை மறுமையின் தேவைகளை அல்லாஹ் கொடுத்துவிடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அம்ர் பின் அபஸா (ரலி) அவர்கள் அறிவித்ததையும் நான் செவியேற்றுள்ளேன் என்றும் கூறினார்.

(almujam-alawsat-1505: 1505)

حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي جَدِّي، عَنْ أَبِيهِ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، [ص:140] عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ:

لَوْ لَمْ أَسْمَعْهُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا أَوْ أَرْبَعًا، أَوْ خَمْسًا، أَوْ سِتًّا، لَمْ أُحَدِّثْ بِهِ. ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ذَهَبَ الْإِثْمُ مِنْ سَمْعِهِ وَبَصَرِهِ وَيَدَيْهِ وَرِجْلَيْهِ»

فَقَالَ أَبُو ظَبْيَةَ الْحِمْصِيُّ: وَهُوَ جَالِسٌ مَعَنَا: أَمَا سَمِعْتَ عَمْرَو بْنَ عَبَسَةَ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: وَسَمِعْتُهُ يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَاتَ طَاهِرًا عَلَى ذِكْرِ اللَّهِ لَمْ يَتَعَارَّ سَاعَةً مِنَ اللَّيْلِ، يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الدُّنْيَا وَالْآخِرَةِ، إِلَّا أَعْطَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِيَّاهُ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الْحَكَمِ إِلَّا سُلَيْمَانُ، تَفَرَّدَ بِهِ: مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1505.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1531.




إسناد شديد الضعف فيه سليمان بن أبي داود الحراني وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுலைமான் பின் அபூதாவூத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…

பார்க்க : குப்ரா நஸாயீ-10575 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.