தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-6215

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரவிலும், பகலிலும் இரண்டு நற்குணங்களை  வழமையாக கடைப்பிடித்து வரும் முஸ்லிமான அடியாரை, அல்லாஹ் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அவை ஒரு அடியார் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-தடவையும், அல்லாஹு அக்பர் 10-தடவையும், லாஇலாஹ இல்லல்லாஹ் 10-தடவையும் கூறுவதாகும். இவைகள் இரவிலும், பகலிலும் நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். ஆனால் அல்லாஹ்விடத்தில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! இதை நாங்கள் ஏன் வழமையாக கடைப்பிடிக்க முடியாது? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றிய பிறகு ஷைத்தான் அவரிடம் வந்து அவரின் தேவைகளை நினைவூட்டுவான். எனவே அந்த தஸ்பீஹ்களை கூறுவதற்கு முன் அவர் எழுந்து விடுவார்.

“உங்களில் ஒருவர் படுக்கைக்கு செல்லும் போது அவரின் கவனத்தை ஷைத்தான் திசை திருப்பிவிடுவான். இறுதியில் அவர் (அந்த தஸ்பீஹ்களை கூறாமல்) தூங்கிவிடுவார்” என பதிலளித்தார்கள்.

(almujam-alawsat-6215: 6215)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّائِغُ قَالَ: نا مُحَمَّدُ بْنُ يُوسُفَ الزُّبَيْدِيُّ أَبُو حُمَّةَ قَالَ: نا أَبُو قُرَّةَ مُوسَى بْنُ طَارِقٍ، عَنْ زَمْعَةَ بْنِ صَالِحٍ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنْ أَبَانَ قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«خَصْلَتَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّهَ، وَهُمَا يَسِيرَانِ، وَقَلِيلٌ مَنْ يُحَافِظُ عَلَيْهِمَا» ، قَالُوا: وَمَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «تَسْبِيحُ الْعَبْدِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُهَلِّلُ عَشْرًا، وَهِيَ خَمْسُونَ وَمِائَةٌ فِي يَوْمِهِ وَلَيْلَتِهِ، وَهِيَ عِنْدَ اللَّهِ أَلْفٌ وَخَمْسُ مِائَةِ حَسَنَةٍ، وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ تَسْبِيحَةً، وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ تَحْمِيدَةً، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ تَكْبِيرَةً، فَذَلِكَ مِائَةٌ، وَهِيَ عِنْدَ اللَّهِ أَلْفُ حَسَنَةٍ، فَذَلِكَ أَلْفَانِ وَخَمْسُ مِائَةِ حَسَنَةٍ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا لَنَا لَا نُحَافِظُ عَلَى ذَلِكَ؟ قَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَضَى صَلَاتَهُ أَتَاهُ الشَّيْطَانُ، فَذَكَّرَهُ حَوَائِجَهُ، فَيَقُومُ قَبْلَ أَنْ يَقُولَهَا، فَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ أَتَاهُ، فَأَلْهَاهُ عَنْهَا حَتَّى يَنَامَ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ إِلَّا زَمْعَةُ، تَفَرَّدَ بِهِ أَبُو قُرَّةَ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6215.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6383.




إسناد ضعيف فيه زمعة بن صالح اليماني وهو ضعيف الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸம்ஆ பின் ஸாலிஹ் பலவீனமானவர். மேலும் இதில் வரும் அபான் எந்த அபான் என்றும் அறியப்படாதவர். இந்த கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.

பார்க்க : திர்மிதீ-3410 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.