அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு நற்குணங்களை (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! அவைகளை வழமையாக கடைப்பிடித்து வரும் எவரும் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார்.
அவைகள், ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் அல்லாஹு அக்பர் 10-தடவையும், ஸுப்ஹானல்லாஹ் 10-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-தடவையும் கூறுவதாகும்.
இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.
(தூங்கும் முன்) படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும், அல்லாஹு அக்பர் 34-தடவையும் கூறுவதாகும். இவைகள் நாவில் நூறு தடவையாகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 1000-ஆயிரம் நன்மைகளாகும். (ஆக மொத்த நன்மைகள் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் தான் ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.
அப்போது நபித்தோழர்களில் சிலர், மேற்கண்ட நற்செயல்களை செய்வது எளிதான காரியம் தானே என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவு செய்த பின், ஷைத்தான் அவரிடம் வந்து இன்னின்ன தேவைகளை நினைத்துப்பார் என்று ஊசலாட்டத்தை ஏற்படுத்துவான் (எனவே அவர் தஸ்பீஹ்களை ஓதாமல் சென்று விடுவார்) என்று பதிலளித்தார்கள்.
(almujam-alawsat-7485: 7485)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، نَا الْحُسَيْنُ بْنُ عِيسَى، نَا الْفُرَاتُ بْنُ خَالِدٍ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ السَّائِبِ، يَذْكُرُ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ:
«خَلَّتَانِ هُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ، لَا يُوَاظِبُ عَلَيْهِمَا أَحَدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ: فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرُ تَكْبِيرَاتٍ، وَعَشْرُ تَسْبِيحَاتٍ، وَعَشْرُ تَحْمِيدَاتٍ، فَهَذِهِ خَمْسُونَ وَمِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ أَرْبَعًا وَثَلَاثِينَ، فَذَاكَ مِائَةٌ عَلَى اللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يُذْنِبُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةِ ذَنْبٍ؟» فَقَالَ بَعْضُهُمْ: إِنَّ هَذَا أَمْرٌ الْعَمَلُ فِيهِ يَسِيرٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ يَأْتِي أَحَدَكُمْ إِذَا فَرَغَ مِنْ صَلَاتِهِ فَيَقُولُ: اذْكُرْ حَاجَةَ كَذَا وَحَاجَةَ كَذَا»
لَمْ يَرْوِ هَذَيْنِ الْحَدِيثَيْنِ عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ إِلَّا الْفُرَاتُ بْنُ خَالِدٍ وَمُحَمَّدُ بْنُ سَابِقٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7485.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7681.
إسناد ضعيف فيه محمد بن شعيب الأصبهاني وهو ضعيف الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஷுஐப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3410 .
சமீப விமர்சனங்கள்