நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும் கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10785)حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْعَلَّافُ، وَأَحْمَدُ بْنُ رِشْدِينَ، قَالَا: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّيَّ يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ:
صَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، يَوْمًا يُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ عَامُ الْمُقْبِلِ إِنْ شَاءَ اللهُ صُمْنَا التَّاسِعَ» ، فَلَمْ يَأْتِ عَامُ الْمُقْبِلِ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10785.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10641.
- இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் ராவீ-5418-இப்னு ரிஷ்தீன்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் வரும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானதாகும். ஏனெனில் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ் அவர்கள் விமர்சித்துள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களும் அறிஞர்கள் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். எனக் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 1/594)
மேலும் பார்க்க: முஸ்லிம்-2088 .
சமீப விமர்சனங்கள்