ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால் அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 14251)حدثنا الِمقْدامُ بن داود، حدثنا خالدُ بن نزار، ثنا هشام بن سعد، عن سعيد بن أبي هِلال، عن ربيعة بن سَيْف، عن عِياض بن عُقْبة الفِهْري، عن عبد الله بن عَمرو، قال: قال رسولُ الله صلى الله عليه وسلم:
«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ في يَوْمِ الجُمُعَةِ، أو لَيْلَةِ جُمُعَةٍ، إِلاَّ وَقَاهُ اللهُ فِتْنَةَ القَبْرِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-14251.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இயாள் பின் உக்பா யாரென அறியப்படாதவர். மேலும் இதில் வரும் ஹிஷாம் பின் ஸஃத் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : அஹ்மத்-6582 .
சமீப விமர்சனங்கள்