பகரா (2-வது) அத்தியாயம் குர்ஆனில் உயர்ந்ததும், சிறந்ததும் ஆகும். அதனின் ஒவ்வொரு வசனத்துடனும் 80 வானவர்கள் இறங்கினர். ‘அல்லாஹு லாஇலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்’ என்னும் வாசகம் அர்ஷின் அடியிலிருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் சேர்க்கப்பட்டதாகும்.
யாஸீன் (36-வது) அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி அதை ஓதுபவர் மன்னிக்கப்படுவார். மேலும் நீங்கள் உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு அதை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 511)حَدَّثَنَا سَهْلُ بْنُ مُوسَى شِيَرانُ الرامْهُرْمَزِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، ثنا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
الْبَقَرَةُ سَنَامُ الْقُرْآنِ وَذُرْوَتُهُ، وَنَزَلَ مَعَ كُلِّ آيَةٍ مِنْهَا ثَمَانُونَ مَلَكًا، وَاسْتُخْرِجَتِ: {اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} [البقرة: 255] مِنْ تَحْتِ الْعَرْشِ فَوُصِلَ بِهَا – أَوْ وُصِلَتْ – بِسُورَةِ الْبَقَرَةِ، وَيس قَلْبُ الْقُرْآنِ، لَا يَقْرَأُهَا رَجُلٌ يُرِيدُ اللهَ وَالدَّارَ وَالْآخِرَةَ إِلَّا غَفَرَ اللهُ لَهُ، واقْرَؤُوهَا عَلَى مَوْتَاكُمْ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-511.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16935.
- இந்த செய்தியில் மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரும், இவரிடமிருந்து அறிவிக்கும் அவரின் மகனும் யாரென தெளிவாக கூறப்படவில்லை என்பதால் அறியப்படாதவர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-20300 .
சமீப விமர்சனங்கள்