தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-54

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒன்றுத்திரட்டப்படும் இடம், உயிர்பிக்கப்படும் இடம். அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள். ஏனெனில் அங்கு ஒரு தொழுகை தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையை விட 1000 மடங்கு சிறந்தது என்று கூறினார்கள்.

அதற்கு மைமூனா அவர்கள், அங்கு சென்று தொழமுடியாதவர் என்ன செய்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள். அவ்வாறு அனுப்புபவர் அதில் தொழுதவரைப் போன்றவராவார் என்று கூறினார்கள்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 54)

حَدَّثَنَا بَكْرُ بْنُ سَهْلٍ الدِّمْيَاطِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، ثنا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ زِيَادِ بْنِ أَبِي سَوْدَةَ، عَنْ مَيْمُونَةَ وَلَيْسَتْ، بِمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللهِ، أَفْتِنَا عَنْ بَيْتِ الْمَقْدِسِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَرْضُ الْمَحْشَرِ وَالْمَنْشَرِ، ائْتُوهُ فَصَلُّوا فِيهِ، فَإِنَّ الصَّلَاةَ فِيهِ كَأَلْفِ صَلَاةٍ، قَالَتْ: أَرَأَيْتَ مَنْ لَمْ يُطِقْ أَنْ يَتَحَمَّلَ أَنْ يَأْتِيَهُ؟ قَالَ: فَإِنْ لَمْ يُطِقْ ذَلِكَ فَلْيُهْدِ إِلَيْهِ زَيْتًا يُسْرَجُ فِيهِ، فَمَنْ أَهْدَى إِلَيْهِ كَانَ كَمَنْ صَلَّى فِيهِ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-54.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




மேலும் பார்க்க: அபூதாவூத்-457 .

2 comments on Almujam-Alkabir-54

  1. பாத்ரபத நண்பர்களிடம் கடன் வாங்கி கொடுக்க முடியாத நிலையில் இறந்து விட்டால் கேள்வி கேட்கும் போது அவருக்கு கொடுக்க வேண்டிய கடனுக்காக என்னுடைய நன்மைகள் மாற்றுமத நண்பர்களுக்கு கொடுக்கப்படுமா

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். (அல்குர்ஆன் 40:17)

      இந்த வசனத்தின் அடிப்படையில் முஸ்லிமல்லாதவர்களுக்கு அநியாயம் செய்திருந்தால் அதைப்பற்றியும் அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான் என்று தெரிகிறது. அதற்கு அல்லாஹ் எப்படி பழிதீர்ப்பான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.