தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7979

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

…அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவர் இறந்து அவரை நீங்கள் அடக்கம் செய்தால், அவரின் கப்ரின் தலைக்கருகில் நின்று, “இன்ன பெண்ணின் மகனே!  என்று கூறட்டும். இறந்தவர் அதை செவியேற்பார். ஆனால் பதிலளிக்கமாட்டார். மீண்டும் “இன்ன பெண்ணின் மகனே!  என்று கூறட்டும். இப்போது அவர் எழுந்து உட்காருவார்….

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7979)

سَعِيدُ بْنُ عَبْدِ اللهِ الْأَوْدِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ

حَدَّثَنَا أَبُو عَقِيلٍ أَنَسُ بْنُ سَلْمٍ الْخَوْلَانِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْعَلَاءِ الْحِمْصِيُّ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللهِ الْأَوْدِيِّ، قَالَ:

شَهِدْتُ أَبَا أُمَامَةَ وَهُوَ فِي النَّزْعِ، فَقَالَ: إِذَا أَنَا مُتُّ، فَاصْنَعُوا بِي كَمَا أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نصْنَعَ بِمَوْتَانَا، أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” إِذَا مَاتَ أَحَدٌ مِنْ إِخْوَانِكُمْ، فَسَوَّيْتُمِ التُّرَابَ عَلَى قَبْرِهِ، فَلْيَقُمْ أَحَدُكُمْ عَلَى رَأْسِ قَبْرِهِ، ثُمَّ لِيَقُلْ: يَا فُلَانَ بْنَ فُلَانَةَ، فَإِنَّهُ يَسْمَعُهُ وَلَا يُجِيبُ، ثُمَّ يَقُولُ: يَا فُلَانَ بْنَ فُلَانَةَ، فَإِنَّهُ يَسْتَوِي قَاعِدًا، ثُمَّ يَقُولُ: يَا فُلَانَ بْنَ فُلَانَةَ، فَإِنَّهُ يَقُولُ: أَرْشِدْنَا رَحِمَكَ اللهُ، وَلَكِنْ لَا تَشْعُرُونَ. فَلْيَقُلْ: اذْكُرْ مَا خَرَجْتَ عَلَيْهِ مِنَ الدُّنْيَا شَهَادَةَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّكَ رَضِيتَ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَبِالْقُرْآنِ إِمَامًا، فَإِنَّ مُنْكَرًا وَنَكِيرًا يَأْخُذُ وَاحِدٌ مِنْهُمْا بِيَدِ صَاحِبِهِ وَيَقُولُ: انْطَلِقْ بِنَا مَا نَقْعُدُ عِنْدَ مَنْ قَدْ لُقِّنَ حُجَّتَهُ، فَيَكُونُ اللهُ حَجِيجَهُ دُونَهُمَا “. فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ، فَإِنْ لَمْ يَعْرِفْ أُمَّهُ؟ قَالَ: «فَيَنْسُبُهُ إِلَى حَوَّاءَ، يَا فُلَانَ بْنَ حَوَّاءَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7979.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7902.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35390-முஹம்மது பின் இப்ராஹீம் அல்அலாஉ பற்றி, ஹதீஸை திருடுபவர் (அதாவது மற்றவர்களின் அறிவிப்பாளர்தொடர்களை வைத்து தான் இன்ன ஆசிரியரிடம் கேட்டதாக பொய்யாக அறிவிப்பவர்) என முஹம்மது பின் அவ்ஃப் அவர்கள் விமர்சித்துள்ளார்.
  • மேலும் இதில் வரும் ராவீ-25456-அப்துல்லாஹ் பின் முஹம்மத், ராவீ-17443-ஸயீத் பின் அப்துல்லாஹ் போன்றோர் அறியப்படாதவர்கள் ஆவர்.

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

1 . இந்த செய்தியின் அடிப்படையில் சிலர் மய்யித்தை அடக்கம் செய்தவுடன் கப்ரின் அருகில் நின்று அவருக்கு தல்கீன்- கப்ரில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லித் தரவேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் இந்தக் கருத்தில் எந்த சரியான செய்தியும் இல்லை.

2. மேலும் மறுமையில் மனிதர்களை தாயுடன் இணைத்து அழைக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

3 . மேலும்,

(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக… (அல்குர்ஆன் 17:71)

என்ற வசனத்தில் வரும் இமாம் என்ற வார்த்தைக்கு உம்-தாய் என்பதின் பன்மை என்று சிலர் விளக்கம் கூறி மறுமையில் மனிதர்கள் தாயின் பெயருடன் இணைத்து அழைக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.

இந்தக் கருத்தையும், அதற்கு கூறும் காரணங்களை ஸமக்ஸரீ இமாம் தனது கஷ்ஷாஃப் என்ற குர்ஆன் விளக்கவுரை நூலில் கூறி இது புதுமையான விளக்கம் என்றும் கூறியுள்ளார்.

(என்றாலும் இந்தக் கருத்துக்கு சரியான ஆதாரங்கள் இல்லை)

மேலும் பார்க்க : அஹ்மத்-21693 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.