ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் குழந்தைகளை வெறுக்காதீர்கள். உங்கள் துன்பங்களில் கைகொடுக்கின்ற இளகிய மனம் படைத்தவர்கள் அவர்கள். மிக மிக விலைமதிப்புமிக்கவர்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 856)حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، ثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي عُشَّانَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تُكْرِهُوا الْبَنَاتِ فَإِنَّهُنَّ الْمُؤْنِسَاتُ الْغَالِيَاتُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-856.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-14288.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற அடிப்படையில் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
- இவரைப் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். சிலர், குறிப்பிட்ட சில அறிவிப்பாளர்கள் இப்னு லஹீஆ விடமிருந்து அறிவித்தால் அவை சரியானது எனக் கூறியுள்ளனர்.
- குதைபா பின் ஸயீத், (இன்னும் சிலரும்) இவரிடமிருந்து அறிவிப்பது சரியானது. காரணம், நான் இப்னு லஹீஆ வின் ஹதீஸ்களை இப்னு வஹ்பின் நூல்களிலிருந்தும், இப்னு லஹீஆவின் சகோதரரின் மகனின் நூல்களிலிருந்தும் தான் எடுத்தெழுதி பின்பு அவரிடம் கேட்டு உறுதி செய்துக் கொள்வேன். அஃரஜின் ஹதீஸ்களைத் தவிர, என்று குதைபா பின் ஸயீத் கூறியுள்ளார். (நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ -1512).
மேலும் பார்க்க: அஹ்மத்-17373 .
சமீப விமர்சனங்கள்